2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' | பிளாஷ்பேக் : ஜெமினி கணேசனுக்கு வில்லனாக நடித்த சிவாஜி கணேசன் | ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் |

பாலிவுட் சினிமாவின் இளம் கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் விக்கி கவுசல். நேற்று அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு, பல பிரபலங்களிடம் இருந்து, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன. எதிர்பாராத விதமாக தமிழ் திரையுலகில் இருந்து, நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள் வாழ்த்து இருந்தது, ரசிகர்களின் புருவங்களை உயர வைத்துள்ளது.
தனது சோஷியல் மீடியா பக்கத்தில் “நீங்கள் எப்போது எதைச் செய்தாலும் அதில் தொடர்ந்து பிரகாசிப்பார்கள். இந்த வருடம் உங்களுக்கு மிகச் சிறந்ததாக இருக்கும்.. மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
இத்தனைக்கும் விக்கி கவுசல், கீர்த்தி சுரேஷ் இருவரும் இணைந்து நடித்தது இல்லை.. இதற்கு முன்பு அவர்களுக்கு பெரிய அளவில் பொது நிகழ்ச்சிகளில் கூட கலந்துகொண்டது இல்லை. கடந்த 2019ல் தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சியில் மகாநடி படத்திற்காக, கீர்த்தி சுரேஷ் தேசிய விருது பெற்ற அதேசமயம், விக்கி கவுசல் உரி ; தி சர்ஜிகல் ஸ்ட்ரைக் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார். அப்போது நேரில் பார்த்து ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்கள் சொல்லிக்கொண்டது தான் அவர்களது ஒரே சந்திப்பு.
ஆனாலும் இரண்டு வருடங்களாக சோசியல் மீடியாவில் அவர்களது நட்பு தொடர்ந்து வருவது கீர்த்தி சுரேஷின் இந்த பிறந்தநாள் வாழ்த்து மூலம் உறுதியாகியுள்ளது.