பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளியான நேனு லோக்கல் படத்தை தொடர்ந்து மீண்டும் நானி, கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் தசரா. இந்த படம் வரும் மார்ச் 30-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் நடித்தது தனக்கு மிகவும் திருப்தி அளித்ததாக கருதிய கீர்த்தி சுரேஷ் படக்குழுவினர் 130 பேருக்கு தலா 10 கிராம் தங்க காசுகளை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். கீர்த்தி சுரேஷின் இந்த செயலே இந்த படத்தை பற்றி இன்னும் அதிக அளவில் பேச வைத்துவிட்டது. இந்த நிலையில் தற்போது ஐதராபாத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிகழ்ச்சி ஒன்றில் பாகுபலி புகழ் நடிகர் ராணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கீர்த்தி சுரேஷ் இருவருக்கும் பாட்டில் சேலஞ்ச் ஒன்றை வைத்தார். அதன்படி சிறிய கூல்ட்ரிங்ஸ் பாட்டில் ஒன்றை வாயில் கவ்வியபடி கைகளில் பிடிக்காமலேயே அதில் உள்ள குளிர்பானம் முழுவதையும் குடிக்க வேண்டும் என்பதுதான் இந்த சேலஞ்ச். இதை நானி, ராணா இருவரும் அசால்ட்டாக நிறைவேற்றி விட, அவர்களை தொடர்ந்து தன் பங்கிற்கு தானும் ஒரு பாட்டிலை எடுத்து இந்த சேலஞ்சை வெற்றிகரமாக செய்து முடித்தார் கீர்த்தி சுரேஷ். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.