மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

மாஸ்டர் மகேந்திரன் குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கில் ஏகப்பட்ட படங்களில் நடித்தவர். 'விழா' படத்தில் ஹீரோ ஆனார், 'மாஸ்டர்' படத்திலும் முக்கியமான ரோலில் நடித்தார். இன்னும் சில படங்களிலும் ஹீரோவாக நடித்தவர். இப்போது அவர் தெலுங்கில் பிஸியான ஹீரோ. அடுத்த ஆண்டு தெலுங்கில் அவர் நடித்த 3 படங்கள் வர இருக்கிறது.
இந்நிலையில் தமிழ், தெலுங்கில் அவர் நடித்த படமான 'த்ரிகண்டா' விழாவில் அவர் பேசுகையில், ''நான் மாஸ்டர் படத்தில் நடித்ததால் மாஸ்டர் மகேந்திரன் அல்ல. அதற்குமுன்பே கே.எஸ்.ரவிகுமார் படங்களில் நடித்தபோது இந்த பட்டம் எனக்கு கிடைத்துவிட்டது. 1994ம் ஆண்டு நாட்டாமை படத்தில் அவர் கொடுத்தார். மாஸ்டர் படத்தில் நடித்ததும் மகிழ்ச்சி. அந்த படம் எனக்கு தெலுங்கில் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. அதனால் அங்கே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழில் என் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை. த்ரிகண்டா படத்துக்கு தியேட்டர்கள் தாருங்கள் என்று நான் கெஞ்சி கேட்கிறேன். தியேட்டர் கிடைத்தால்தானே எங்கள் படத்தின் அருமை, எங்கள் உழைப்பு மக்களுக்கு தெரியும். தெலுங்கில் சின்ன படங்களுக்கு கூட தியேட்டர் கிடைக்காது. அங்கே தியேட்டர் சென்று படம் பார்ப்பவர்கள் அதிகம்.
நான் திருமணம் செய்யவில்லை. இப்போதைக்கு வேண்டாம் என நினைக்கிறேன். என் போராட்டங்கள் முடிவடைந்து வெற்றி பெற்றவுடன் திருமணம் செய்வேன். ஒரு பொண்ணை திருமணம் செய்து, அவரை கஷ்டப்படுத்தக்கூடாது. தியேட்டர் வெற்றிக்காக காத்திருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு என்னை வைத்து படம் தயாரிக்க வந்தவர்களிடம் அவனுக்கு மார்க்கெட் இல்லையே என சிலர் சொன்னார்கள். அதை மீறி உழைக்கிறேன்'' என்றார்.