மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

தமிழ் சினிமாவின் நுாறாண்டு கால வரலாற்றில் 2025ம் ஆண்டு தனியிடம் பிடித்தவிட்டது. இந்த ஆண்டுதான் தியேட்டரில் மட்டும் 275 படங்களுக்கு மேல் வெளியாகி உள்ளன. இதுவரை இந்த எண்ணிக்கையில் எந்த ஆண்டும் படங்கள் வரவில்லை. இப்போது தயாரிப்பு எண்ணிக்கை குறைந்துவிட்டதால் அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையில் படம் வருமா என தெரியவில்லை.
இந்த வாரம் 'சிறை, ரெட்டதல, ரகசிய சினேகிதனே, பருத்தி' படங்கள் வந்தன. இதில் கடைசி படமாக இன்று 'ரகசியம் சினேகிதனே' வந்துள்ளது. இது புதுப்படம் என்பதால் பெரிய வரவேற்பு இல்லை. மற்ற படங்களில் சிறைக்கு மட்டுமே ஓரளவு வரவேற்பு.
இப்படியாக 2025ம் ஆண்டு முடிகிறது. அடுத்த ஆண்டு, ஜனவரி 1ம் தேதி பெரிய தமிழ் படங்கள் வரவில்லை. கன்னட டப்பிங் படங்களான சிவராஜ்குமாரின் '45', சுதீப் கிச்சா நடித்த 'மார்க்' படங்கள் மட்டுமே வருகிறது. 'ஜஸ்டிஸ் பார் ஜெனி' என்ற சின்ன பட்ஜெட் படம் மட்டுமே வருகிறது. அடுத்த ஆண்டு தொடக்கமும் இப்படி இருக்கிறதே என பீல் பண்ணுகிறார்கள் கோலிவுட்டில். பொங்கலுக்குதான் ஜன.,9ல் ஜனநாயகன், 10ல் பராசக்தி வருகிறது.