கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? | கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் |
தமிழில் 'தலைவி' படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகும் ஹிந்தி நடிகை கங்கனா, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொண்டார். நேற்று கொரோனாவிலிருந்து தான் மீண்டு விட்டேன் என்று சொல்லி வீடியோ ஒன்றையும் பதிவிட்டிருந்தார். “நான் கொரோனா பற்றிய ஒரு நிபுணர் அல்ல இருந்தாலும் அந்த வைரஸுடன் போரிட்ட எனது பயணத்தை பகிர்கிறேன், உங்களுக்கு உதவலாம்,” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, கொரோனா நெகட்டிவ் என்று சொல்கிறீர்களே அந்த ரிப்போர்ட்டைக் காட்டலாமே என பலர் கங்கனாவுக்கு கமெண்ட் அடித்துள்ளனர். அதற்கு பதிலளித்துள்ள கங்கனா, “எனது ரிப்போர்ட்டைக் கேட்கும் பேய்களுக்காக இதோ என்னுடைய ரிப்போர்ட். அவர்களது உள்ளத்தின் எண்ணத்தில்தான் இந்த உலகத்தைப் பார்க்கிறார்கள். ஒரு ராம் பக்தை எப்போதும் பொய் சொல்ல மாட்டார், ஜெய் ஸ்ரீராம்,” என பதிலளித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது அதை ஒரு சாதாரண ப்ளு ஜுரம் என கங்கனா சொன்னது சர்ச்சையை ஏற்படுத்தியது. பத்து நாட்களுக்குள் கொரோனாவிலிருந்து தேறி வந்துள்ளார் கங்கனா.