செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
கொரோனா தொற்றால் லேசாக பாதிக்கப்பட்டவர்களை வீட்டில் தனிமைப்படுத்துக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி லேசான பாதிப்புடன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் அந்த தனிமையை எதிர்கொள்ளவும் ஒரு தனி தைரியம் வேண்டும். ஒரு அறைக்குள்ளேயே அடைந்து கிடப்பது என்பது பழக்கமில்லாதவர்களுக்கு மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும். அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் அரசுகள் ஏற்பாடு செய்துள்ளன.
பாலிவுட் நடிகையான கங்கனா ரணவத் சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்தார். பின் மும்பையிலிருந்து தனது சொந்த ஊரான குலுமணாலி சென்று குடும்பத்தினருடன் இணைந்து கொண்டார்.
“கோவிட் நேரத்தில் தனிமையாக இருந்தது தான் அதிக சவாலானது. இன்று மணாலியில் நண்பர்களையும், உறவினர்களையும் சந்திப்பது அன்பானது,” என நேற்று பதிவிட்டுள்ளார்.