அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் |
சென்னை : நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். மூச்சு திணறல் காரணமாக, இம்மாதம் சென்னை, மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சில நாட்கள் தொடர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். நேற்று முன்தினம் மாலை மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் அதே மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனை தான் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என மருத்துவமனை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தே.மு.தி.க., வெளியிட்ட அறிக்கையில், ‛‛மருத்துவ பரிசோதனையில் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சு திணறல் இருப்பதால் வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது'' என தெரிவித்துள்ளார்.