சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தலைவி படத்தில் நடித்துள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், அடுத்து மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாறு கதையில் எமர்ஜென்சி என்ற படத்தை இயக்கி, நடிக்கவும் தயாராகிக் கொண்டிருக்கிறார். 2019ல் மணிகர்னிகா என்ற படத்தை இயக்கி, நடித்தார் கங்கனா. இந்தநிலையில் தற்போது மணிகர்னிகா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
இந்த படத்திற்கான கதை எழுதும் வேலைகளில் அவர் இறங்கியிருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் கஜினி முகமதுவை எதிர்த்து போட்டியிட்ட காஷ்மீர் மகாராணி குயின் டிட்டா வேடத்தில் கங்கனா நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கஜினி முகமதுவை எதிர்த்து போட்டியிட்டவர் என்பதால் அவரை பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக குயின் டிட்டாவின் வேடத்தில் நடிக்கப்போகிறாராம் கங்கனா.
ஆனால் இந்த நேரத்தில் ஆசிஷ் கெளல் என்ற கதாசிரியர், காஷ்மீர் மகாராணி டிட்டாவின் வாழ்க்கையை மையப்படுத்தி தான் எழுதிய தி வாரியர் குயின் ஆப் காஷ்மீர் என்ற புத்தகத்தை தழுவி தனது படத்திற்கான கதையை கங்கனா எழுதியிருப்பதாக மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதையடுத்து கங்கனா சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், இன்னும் நாங்கள் அந்த படத்தையே ஆரம்பிக்கவே இல்லை. அதற்குள் எந்த அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. அதோடு சரித்திர கதைகளை யார் வேண்டுமானாலும் படமாக்கலாம். யாரும் தனிப்பட்ட முறையில் சொந்தம் கொண்டாட முடியாது என்றும் தன்மீது தொடரப்பட்டுள்ள வழக்கு குறித்து விளக்கம் கேட்டுள்ளார் கங்கனா.