சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

2026ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு தமிழ், தெலுங்கில் சில முக்கிய படங்கள் வெளியாகின்றன. தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், சிவகார்த்திகேயன், தெலுங்கில் பிரபாஸ், சிரஞ்சீவி, ரவி தேஜா, சர்வானந்த், நவீன் பொலிஷெட்டி ஆகியோர் நடிக்கும் படங்கள் வருகின்றன. இப்படங்களில் இரண்டு மொழிகளிலும் நடிக்கும் சில முன்னணி கதாநாயகிகள் நடித்துள்ளார்கள்.
விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் ஸ்ரீலீலா.
பிரபாஸ் நடித்துள்ள 'த ராஜா சாப்' படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளார்கள். சிரஞ்சீவி நடித்துள்ள 'மன ஷங்கர வரபிரசாத் காரு' படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். ரவி தேஜா நடித்துள்ள 'பர்த மஹாசாயுலகு விக்ஞாபதி' படத்தில் ஆஷிகா ரங்கநாத், டிம்பிள் ஹயாதி ஆகிய இருவர் கதாநாயகிகள். நவீன் பொலிஷெட்டி நடித்துள்ள 'அனகனகா ஒக ராஜு' படத்தில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். சர்வானந்த் நடித்துள்ள 'நரி நரி நந்தும முராரி' படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடித்துள்ளார்கள்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகும் பொங்கல் படங்களில் நடித்துள்ள கதாநாயகிகள் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் அறிமுகமானவர்கள்தான். கதாநாயகர்களுக்குள் ஒரு பக்கம் போட்டி என்றாலும், இத்தனை கதாநாயகிகள் போட்டி போடுவதும் கூடுதல் சுவாரசியம். அவர்கள் நடிக்கும் படங்களின் வெற்றி அவர்களுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பெற்றத் தரும் என்பதால் அவர்களுக்கும் இது முக்கியமான போட்டிதான்.