ரஜினி 173, கமல் 237, அஜித் 64, தனுஷ் 55 : பொங்கலுக்குள் அறிவிப்புகள் வருமா? | அடுத்தடுத்து மேனேஜர்களை நீக்கிய விஷால், ரவிமோகன் | 100 மில்லியன் கடந்த சிரஞ்சீவி, நயன்தாரா பாடல் | போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! |

பாலிவுட் நடிகை கங்கனா ரணவத், சர்ச்சையான கருத்துக்களை கூறுவதற்கு பெயர் போனவர். இதனால் காவல் நிலையத்தில் இவர் மீது வழக்கு பதியப்படுவதும், நீதிமன்றத்தில் விசாரணைக்காக சம்மன் அனுப்பப்படுவதும் அடிக்கடி நடைபெறும் ஒன்றாக மாறிவிட்டது. இந்த நிலையில் தனது பாஸ்போர்ட் தேதி விரைவில் காலாவதியாக இருக்கிறது என்றும், அதை புதுப்பிப்பதற்காக தனக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கங்கனா மனு செய்திருந்தார்.
காரணம் கங்கனாவின் மீது உள்ள வழக்குகளை காரணம் காட்டி, அவருக்கு பாஸ்போர்ட் புதுப்பிப்பதில் தாமதம் ஏற்படலாம் என கருதியே, அவர் இவ்வாறு மனு செய்துள்ளார். ஆனால், நீதிமன்றம் அவர் மீது வழக்குகள் ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டதற்கு, தன் மீதுள்ள இரண்டு வழக்குகள் பற்றிய விபரங்களை அந்த மனுவில் தெரிவித்துள்ளார் கங்கனா. அது தற்போது அவருக்கு வேறு ஒருவிதமான பிரச்சினையை கொண்டுவந்துள்ளது.
பாலிவுட்டின் பிரபல பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், கங்கனா தன் மீது அவதூறான தகவல்களை ஒரு டிவி நிகழ்ச்சியின்போது கூறினார் என்று அவர் மீது அவதூறு வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கும் நிலையில், அதுபற்றி கங்கனா நீதிமன்றத்தில் தெரிவிக்காமல், உண்மையை மறைத்து விட்டார் என்று குற்றம் சாட்டியுள்ளார் ஜாவேத் அக்தர். அதனால் கங்கனாவின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க கூடாது என்று, இடையீட்டு மனு செய்துள்ளார்