2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

2025ம் ஆண்டிலேயே ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட சில முன்னணி நடிகர்களின் படங்கள் பற்றிய உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகாமல் உள்ளன. அவற்றைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் பொங்கலுக்குள் வெளியாகுமா என்பது அந்த நடிகர்களுடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிக்கும் 173வது படம் பற்றிய அறிவிப்பு நவம்பர் 5ம் தேதியன்று வெளியானது. ஆனால், அடுத்த ஒரு வாரத்தில் அப்படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்ட சுந்தர் சி அப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதேசமயம் படத்தைத் தயாரிக்கும் கமல்ஹாசன் தரப்பிலிருந்து அது குறித்து எதையும் வெளியிடவில்லை. இயக்குனர் யார் என்பது முடிவாகிவிட்டதாகச் சொல்கிறார்கள்.
2024ம் வருடம் ஜனவரி 12ம் தேதி ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்பறிவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 237வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்கள். அதன்பின் ஓரிரு முறை அப்படம் குறித்த அப்டேட்கள் வந்தது. நவம்பர் 7 தேதி படத்தில் பணிபுரிய உள்ள இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் சிலரது பெயர்களை அறிவித்தார்கள். ஆனால், அறிவிப்பு வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆன பின்பும், படப்பிடிப்பு குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
2025ல் வெளிவந்த 'குட் பேட் அக்லி' படத்திற்குப் பிறகு அஜித்குமார் - இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் இணையும் அஜித்தின் 64வது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. படம் வெளியாகி எட்டு மாதங்களுக்கு மேலாகியும் எந்த அறிவிப்பும் வரவில்லை. படத்தின் தயாரிப்பாளர் யார், இதர கலைஞர்கள் யார் என்பதும் வெளியாகவில்லை.
'அமரன்' வெற்றிக்குப் பிறகு அதன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க தனுஷ் நடிக்க உள்ள அவரது 55வது படத்தை கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக 2024ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பூஜை புகைப்படங்களுடன் அறிவிப்பு வெளியிட்டார்கள். ஒரு வருடங்களுக்கு மேலாகியும் படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை. படத்தைத் தயாரிப்பதாக இருந்த கோபுரம் பிலிம்ஸ் விலகிவிட்டதாகத் தகவல். தற்போது படத்தைத் தயாரிக்கும் பொறுப்பை தனுஷ் ஏற்றுக் கொண்டதாகச் சொல்கிறார்கள்.
இந்தப் படங்களின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகி, அவர்கள் படப்பிடிப்பை ஆரம்பித்து, முடித்து, பின்னணி வேலைகளையும் முடித்து 2026ல் வெளியிட வாய்ப்புகள் குறைவுதான். 2027ல் வருவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம். இருந்தாலும் அஜித், தனுஷ் படங்கள் வெளியாக வாய்ப்புள்ளது.