2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

2026 புத்தாண்டு தினத்தையொட்டி தமிழ் சினிமாவும் களை கட்டியுள்ளது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டு வாசலில் கூடியிருந்த ரசிகர்களின் புத்தாண்டு வாழ்த்துகளை ஏற்றுக் கொண்ட ரஜினிகாந்த், அவர்களுக்கும் வாழ்த்து கூறியுள்ளார். அவர்கள் அன்பாக கொடுத்த பட்டு வேட்டி, விவேகானந்தர் சிலையையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். பின்னர், சென்னை திருவல்லிக்கேணி ராகவேந்திரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் ரூட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.
கமல்ஹாசன் விடுத்த புத்தாண்டு வாழ்த்து செய்தியில், ‛துரித உணவு, செல்போன் பார்ப்பதை குறைக்க வேண்டும். நல்ல துாக்கம், ஆரோக்கியம் வேண்டும் என்று கூறியுள்ளார். விஜய் அரசியல் சார்ந்து வாழ்த்தியுள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு ராஜ்குமார் இயக்கத்தில் தான் நடிக்கும் 300வது படமான ‛அர்ஜூனன் பேர் பத்து' பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார் யோகிபாபு.

மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் ‛டிரைன்' பட சிறப்பு போஸ்டர், டிமாண்டிகாலனி 3 பர்ஸ்ட் லுக், அர்ஜூன் இயக்கும் சீதா கல்யாணம் பர்ஸ்ட் லுக், காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் பத்துநாள் ராஜா பர்ஸ்ட் லுக், விஷால் மகுடம் போஸ்டர், ஜீவாவின் டிடிடி போஸ்டர், வெற்றி நடிக்கும் லஷ்மிகாந்தன்கொலை வழக்கு போஸ்டர், விமலின் வடம் போஸ்டர், பிரபாசின் திராஜாசாப் சிறப்பு போஸ்டர் மற்றும் வவ்வால், ரேஜ் படங்களின் போஸ்டர் புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளன.
பிப்ரவரி 6ம் தேதி டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் அபிஷன்ஜீவிந்த் ஹீரோவாக நடிக்கும் வித்லவ் படம் ரிலீஸ் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது. அரிசி படத்துக்காக இளையராஜா இசையில் வேடன், அறிவு பாடிய பாடல் குறித்த அறிவிப்பும், ஜமா அறிவழகன் அடுத்த பட அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னை வடபழனி முருகன் கோயிலில் மனைவி ஆர்த்தியுடன் சாமி தரிசனம் செய்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். யோகிபாபு திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்றார். அந்த போட்டோ, வீடியோவும் இன்று வைரலாகி உள்ளன.
ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளத்தில் முத்து படத்தில் மீனாவுடன் குதிரை வண்டியில் செல்லும் காட்சியை வெளியீட்டு நான் போற ரூட்டு பற்றி கவலைப்படமாட்டேன். ஆண்டவன் மீது பாரத்தை போட்டுட்டு, வண்டி எந்த ரூட்டு போறதோ, அந்த ரூட்டுல சிவானு போவேன்னு புதுமையாக வாழ்த்து கூறியுள்ளார். அதுவும் வைரலாகி வருகிறது.