பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
படம் : நியூ
வெளியான ஆண்டு : 2004
நடிகர்கள் : எஸ்.ஜே.சூர்யா, சிம்ரன், தேவயானி, கிரண்
இயக்கம் : எஸ்.ஜே.சூர்யா
தயாரிப்பு : அன்னை மேரிமாதா கிரியேஷன்ஸ்
பிக் என்ற ஹாலிவுட் படத்தின் தழுவலே, நியூ. வாலி, குஷி படத்தின் இயக்குனராக இருந்த எஸ்.ஜே.சூர்யா, நியூ படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். இப்படத்தில் முதலில் நடிக்கவிருந்த ஜோடி, அஜித் - ஜோதிகா. அதன் போஸ்டர் கூட வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஆனால் அவர்கள், படத்தில் இருந்து விலகினர். அதன் பின், எஸ்.ஜே.சூர்யாவே, சிம்ரன் மற்றும் கிரணுடன் களமிறங்கினார்.
8 வயது சிறுவன் ஒருவன், விஞ்ஞானி ஒருவரால், 28 வயதுடைய நபராக மாற்றம் அடைகிறான். பகல் நேரத்தில் சிறுவனாக, தன் தாயின் அரவணைப்பிலும்; இரவு நேரத்தில் வாலிபனாக, காதலி சிம்ரனுடனும் வாழ்கிறான். இந்த சுவாரஸ்யமான கதைக்குள் கவர்ச்சி, ஆபாசம் அள்ளித் தெளித்து இயக்கியிருந்தார், எஸ்.ஜே.சூர்யா.
இப்படத்திற்கு, தணிக்கைக் குழு சான்றிதழ் தர மறுத்தது. அப்போது நிகழ்ந்த சண்டைகள், பரபரப்பு செய்திகளாக வெளிவந்தன. அதன் பின், மும்பை சென்று, அங்குள்ள சென்சார் போர்டிடம் அனுமதி பெற்று, படத்தை வெளியிட்டார், எஸ்.ஜே.சூர்யா.
படம் வெளியான பின், இப்படத்தின் மீது, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. படத்தை பார்த்த நீதிபதிகள், 'இப்படத்திற்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் கொடுத்துள்ளது ஆச்சரியமாக உள்ளது. இவ்வளவு ஆபாச காட்சிகள், வசனங்களுடன் இப்படத்தை எடுத்துள்ள இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவை, நீதிமன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது' என்றனர்.
நியூ உருவாகிக் கொண்டிருந்தபோதே, தெலுங்கில் மகேஷ் பாபுவுடன், நானி என்ற பெயரில் படமாக்கப்பட்டது. நியூ படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். 'தொட்டால் பூ மலரும்...' ரீமிக்ஸ் பாடல், வரவேற்பை பெற்றது. பலத்த சர்ச்சைகளை சந்தித்தாலும், இப்படம் வசூலை அள்ளிக் குவித்தது. இப்போது வரும் படங்களை பார்க்கையில், நியூ படம் கத்துக்குட்டி தான்!