பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
படம் : தவமாய் தவமிருந்து
வெளியான ஆண்டு : 2005
நடிகர்கள் : சேரன், ராஜ்கிரண், பத்மபிரியா, சரண்யா
இயக்கம் : சேரன்
தயாரிப்பு : சிருஷ்டி
ஒரு குடும்பத்தலைவரின், 35 ஆண்டு கால வாழ்க்கை தான், தவமாய் தவமிருந்து!தாயின் அன்பை ஏராளமாக பதிவு செய்த சினிமா, தந்தையின் தியாகத்தை கவனிக்கத் தவறியது. அக்குறையை, தவமாய் தவமிருந்து படம் மூலம் நீக்கினார், சேரன்.
ஆட்டோகிராப் பெரும் வெற்றிக்கு பின், சேரன் இயக்கி, நடித்த படம், இது என்பதால், பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. அதை ஓரளவு நிறைவேற்றியிருந்தார். படத்தை தாங்கி நிற்கும் தந்தை கதாபாத்திரத்திற்கு மம்மூட்டி, நாசர் உள்ளிட்டோர் அணுகப்பட்டனர். இறுதியில் ராஜ்கிரண் நடித்தார். அந்த கதாபாத்திரத்திற்கு உரிய நியாயத்தை, தன் நடிப்பால் வெளிக்காட்டினார்.
கேரள இளம்பெண் பத்மபிரியா, இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து, ஓரிரு படங்களில் சேரனுடன் பயணித்தார்.படத்தின் இயக்குனராக சேரன் ஜொலித்தாலும், இப்படத்தில் சிறந்த நடிகராக வெளிப்படவில்லை. அவரின் நடிப்பு, விமர்சனத்திற்குள்ளானது. ஆனால், இரட்டை அர்த்த காமெடி, குத்துப்பாட்டு, அனல் பறக்கும் சண்டை காட்சிகள் ஏதும் இல்லாமல், தன் தனித்துவத்தை இழக்காமல், இப்படத்தை தந்த சேரனுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கலாம்.
இப்படம் எடுத்து முடித்த பின், மொத்தம் ஐந்து மணி நேரம் இருந்தது. எடிட்டிங்கில், மூன்று மணி, 20 நிமிடம் என குறைக்கப்பட்டது. மிக நீண்ட படமான இதை, மக்கள் பொறுமையோடு தியேட்டரில் அமர்ந்து பார்த்தனர். சபேஷ் - முரளியின் இசை, கதையோட்டத்திற்கு உதவியது. ஆக்காட்டி குருவி பாட்டு, மிகவும் பிரபலமானது. இந்த படம், குடும்ப நலன் குறித்த சிறந்த படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது.
தந்தையின் தியாகத்தை நினைவுபடுத்தியது,தவமாய் தவமிருந்து!