'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

படம் : சச்சின்
வெளியான ஆண்டு : 2005
நடிகர்கள் : விஜய், ஜெனிலியா, வடிவேலு, சந்தானம், ரகுவரன்
இயக்கம் : ஜான் மகேந்திரன்
தயாரிப்பு : கலைப்புலி எஸ்.தாணு
சச்சின் படத்தில் நடித்த, துறுதுறு விஜய்யை எல்லாருக்கும் பிடிக்கும். 'சோ க்யூட்!' என, இளம் பெண்கள் ஜொள்ளு வடித்தனர். இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான், 2002ம் ஆண்டு இயக்கிய தெலுங்கு படம், நீத்தோ. இப்படத்தை தமிழில், விஜய் நடிப்பில், சச்சின் என, 'ரீமேக்' செய்தார்.
'நான், உன்னை காதலிக்கிறேன்... இன்னும், 30 நாளில், நீயும் உன் காதலை ஒத்துக்கொள்வாய்' என, விஜய் சவால் விடுகிறார். விஜய் மீது இருக்கும் காதலை மறைத்து, ஜெனிலியாவும் சவாலை ஏற்றுக் கொள்கிறார். இது தான், படத்தின் கரு. குஷி படம் போல தான் என்றாலும், இதில் நகைச்சுவையும், காதலும் மிக அழகாக இருந்தது.
'கவர்ச்சி புயல்' என வர்ணிக்கப்பட்ட, பிபாஷா பாஷு, இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். குறும்புத்தனமான ஷாலினி கதாபாத்திரத்தில் ஜெனிலியா, இன்னும் அழகாக இருந்தார். அந்த படத்தில், ஜெனிலியாவின் குரலும் கவனம் ஈர்த்தது. அவருக்கு டப்பிங் பேசியது, நடிகை கனிகா.
இப்படத்தின் இன்னொரு நாயகன், 'அய்யாசாமி' வடிவேலு தான். அவரின் காமெடியில், சிரித்தே வயிறு வலித்தது. படத்தின் கதைக்களம் ஊட்டி என்பதால், ஜீவாவின் ஒளிப்பதிவு குளுகுளுவென இருந்தது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில், பாடல்கள் ரசிக்க வைத்தன.
ரஜினிகாந்தின் சந்திரமுகி, கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படத்துடன் வெளியானது. சந்திரமுகி முதலிடத்தையும், சச்சின் இரண்டாம் இடத்தையும் பிடித்தது. ஆளவந்தான் பட தோல்வியால் கடனில் இருந்த தயாரிப்பாளர் எஸ்.தாணு, இப்படத்தின் மூலம், இழப்பில் இருந்து மீண்டார்.
ஆடுகளத்திற்குள், சச்சின் நுழைந்தாலே கொண்டாட்டம் தான்!