பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
மலையாள திரையுலகில் எவர்கிரீன் கூட்டணியான மோகன்லால் - பிரியதர்ஷன் கூட்டணியில் மிக பிரமாண்டமான வரலாற்று படமாக உருவாகியுள்ள படம் தான் 'மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்'. அர்ஜுன், பிரபு, சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ் என ஏகப்பட்ட பிரபலங்கள் இடம்பெற்றுள்ள இந்தப்படம் தியேட்டரில் தான் வெளியாகும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது சூழல் சரியில்லாததால் நேரடியாக ஒடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் கூறியுள்ளார்.
ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டமைப்பில் இந்த முடிவு சலசலப்பையும் வருத்தம் கலந்த எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. “கடந்த மாதம் கூட, ஓணம் பண்டிகைக்கு தியேட்டர்களில் வெளியிடலாம் என்கிற உறுதியான முடிவில் தான் இருந்தார்கள், ஆனால் அதைவிட இப்போது நிலைமை நன்றாகத்தானே இருக்கிறது. பின் ஏன் தியேட்டர்களில் வெளியிட தயங்குகிறார்கள் என தெரியவில்லை.. இந்த சமயத்தில் மரைக்கார் போன்ற பெரிய படங்கள் தியேட்டர்களில் வெளியாவது தான் சினிமாவை மீண்டும் சகஜ நிலைக்கு கொண்டுவரும்” என இந்த கூட்டமைப்பின் தலைவர் விஜயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். எப்படியும் மரைக்கார் படம் தியேட்டர்களில் தான் வெளியாகும் என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்..