பொங்கல் போட்டியில் 'ராட்ட' | கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்துக்கு கிடைத்த ஆதரவு விஜயின் ஜனநாயகனுக்கு கிடைத்ததா? | கிரிசில்டா மீது மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக்: தேங்காய் சீனிவாசனிடம் எம்ஜிஆரின் கண்டிப்பும், கருணையும் | பிளாஷ்பேக்: 'பராசக்தி'யை தங்கமாக மின்ன வைத்த மதுரை தியேட்டர் | நாளை ஜனநாயகன் படம் ரிலீஸ் இல்லை! | ஜன. 30ல் திரைக்கு வரும் ‛தலைவர் தம்பி தலைமையில்' | 'பாபு, ஏய்' படங்களின் 'உல்டா' தான் 'பகவந்த் கேசரி', அதன் ரீமேக் தான் 'ஜனநாயகன்' | பிப்ரவரி முதல் கல்கி 2 படப்பிடிப்பில் கமல்ஹாசன் | திரிஷ்யம் 3 ரிலீஸ் எப்போது : இயக்குனர் தகவல் |

மலையாள சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஷேன் நிகம். தான் நடித்து வந்த வெயில் படத்தில் சம்பளம் அதிகமாக கேட்டு தயாரிப்பாளருடன் பிரச்சனை செய்து ரெட்கார்டு போடப்படும் நிலைக்கு ஆளானார். அதன்பின் தவறுக்கு மன்னிப்பு கேட்டு தற்போது சில படங்களில் நடித்து வருகிறார் ஷேன் நிகம். அப்படி அவர் நடிக்கும் ஒரு படம் தான் பெர்முடா.
இந்தப்படத்தை பிரபல மலையாள இயக்குனர் டி.கே.ராஜீவ் குமார் இயகியுள்ளார். பல வருடங்களுக்கு முன் மலையாளத்தில் கமல் நடித்த சாணக்யன் படத்தை இயக்கியவரும், சில வருடங்களுக்கு முன் கமல் நடிப்பில் துவங்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட சபாஷ் நாயுடு படத்தை இயக்கியவரும் இவர் தான்.
இந்தப்படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை மோகன்லால் பாடியுள்ளார். டி.கே.ராஜீவ் குமாரின் டைரக்சனில் சில படங்களில் நடித்துள்ளார் மோகன்லால். அந்த நட்பின் அடிப்படையில் தான் இந்த பாடலை பாடியுள்ளார். மேலும் இளைய தலைமுறைக்கான கொண்டாட்டமான பாடலாக இது இருக்கும் என்பதால் இந்த பாடலை பாடவேண்டும் என்கிற உத்வேகம் எனக்கு ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார் மோகன்லால்.