தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பிரபல மலையாள பாடலாசிரியர் பிச்சு திருமலா இன்று(நவ., 26) காலமானார். அவருக்கு வயது 80. கடந்த சில வாரங்களாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த பிச்சு திருமலா கடந்த சில நாட்களாகவே வெண்டிலேட்டர் உதவியுடன் தான் நாட்களை நகர்த்தி வந்தார்.
1972ல் பஜகோவிந்தம் என்கிற மலையாள படத்தின் மூலம் பாடலாசிரியாக நுழைந்த இவர் சுமார் நானூறு படங்களில் பணியாற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இரண்டுமுறை கேரளா அரசு விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.
தமிழ் இசையமைப்பாளர்களான எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் இசையிலும் பாடல்கள் எழுதியுள்ளார். மலையாளத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஒரே படமான யோதாவில் இவர் பாடல் எழுதியுள்ளார். மேலும் மோகன்லால் அறிமுகமான மஞ்சில் விரிஞ்ச பூக்கள் படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியது இவர் தான்.