ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி | ‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' | பிளாஷ்பேக் : ஜெமினி கணேசனுக்கு வில்லனாக நடித்த சிவாஜி கணேசன் |

மலையாளத்தில் பிரபல இயக்குனர் பிளஸ்சி டைரக்சனில் பிரித்விராஜ் நடிக்கும் படம் ஆடுஜீவிதம். அரபுநாட்டு பாலைவனத்தில் ஒட்டகம் மேய்த்து கஷ்டப்படும் நஜீப் என்கிற கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் கேரளாவிலும் மற்றும் ஜோர்டன் நாட்டிலும் நடைபெற்றுள்ளது.
குறிப்பாக கடந்த வருடம் மார்ச் மாதம் ஜோர்டன் நாட்டில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது தான், கொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு படக்குழுவினர் அங்கேயே மூன்று மாதம் தங்க வேண்டிய ஒரு சூழல் உருவானது. அதன்பிறகு கேரளா திரும்பிய பிரித்விராஜ், வேறு சில படங்களில் நடித்ததுடன், மோகன்லாலை வைத்து ப்ரோ டாடி என்கிற படத்தையும் இயக்கி முடித்துவிட்டார்.
தற்போது ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் கடுவா என்கிற படத்தில் நடித்துவரும் பிரித்விராஜ் விரைவில் அதை முடித்துவிட்டு, மீண்டும் ஆடுஜீவிதம் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக வட ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவுக்கு பயணப்பட இருக்கிறார். இதற்காக தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ள பிரித்விராஜ், இந்த தகவலை அவரே தெரிவித்தும் உள்ளார்.




