மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! | ‛துப்பாக்கி 2': ஐடியா பகிர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ் | சிரிக்க முடியாத நகைச்சுவை நடிகர்கள்!: மதுரை முத்து |
மலையாள திரையுலகில் வித்தியாசமான அதேசமயம் துணிச்சலான வேடங்களில் நடித்து ரசிகர்களை பிரமிக்க வைக்கும் நடிகைகளில் முக்கியமானவர் ஸ்வேதா மேனன். அவரது ரதி நிர்வேதம் படமாகட்டும், அல்லது தனது நிஜ பிரசவத்தையே படமாக்க அனுமதித்த 'களிமண்ணு' படமாகட்டும், நடிப்புக்காக வழக்கமான எல்லைக்கோடுகளை தாண்ட தயங்காதவர் ஸ்வேதா மேனன். கடந்த இரண்டு வருடங்களாக பரபரப்பில் இருந்து ஒதுங்கியிருந்த ஸ்வேதா மேனன் தற்போது புத்தாண்டை முன்னிட்டு மவுனம் கலைத்துள்ளார்.
தனது சோஷியல் மீடியா பக்கத்தில் அவர் கூறும்போது, “கடந்த இரண்டு வருடங்கள் எல்லாவற்றையுமே மாற்றி விட்டன. நினைத்து பார்த்தால் மாநாடு படம் போலவே வாழ்க்கை மாறிவிட்டது. கொரோனா வந்தது.. லாக்டவுன் போட்டார்கள்.. ஓரளவு நிலைமை சரியானது.. ரிப்பீட்டு.. திரும்பவும் கொரோனா.. லாக்டவுன்.. மீண்டும் சரியானது.. இந்த புது வருடமாவது இந்த லூப்பில் இருந்து நம்மை காப்பாற்றும் என நம்புகிறேன்” என கூறியுள்ளார் ஸ்வேதா மேனன்