டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

பிரபல மலையாள நடிகர் திலீப் மீது ஏற்கனவே நடிகை கடத்தல் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கில் சிறை சென்று தற்போது ஜாமீனில் வெளியே வந்து படங்களில் நடித்து வருகிறார் திலீப். இந்த நிலையில் இவர் மீது இதே வழக்கு தொடர்பான இன்னொரு வழக்கும் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு விண்ணப்பித்து இருந்தார் நடிகர் திலீப். கடந்த ஒரு மாத காலமாக கிட்டதட்ட ஐந்து, ஆறு முறை இதன் மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டு நேற்று மீண்டும் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கை வரும் பிப்ரவரி 7ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக கூறினார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக திலீப்பிடமும், அவரது சகோதரரிடமும், மைத்துனர் இடமும் போலீசார் 3 நாட்கள் தீவிர விசாரணை நடத்தி அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். எனவே வரும் 7ஆம் தேதி திலீப்பின் முன் ஜாமீன் மனு மீது இறுதி முடிவு எடுக்கப்படலாம் என்றே தெரிகிறது.