பைக் சாகசம் செய்து வீடியோ வெளியிட்ட பார்வதி | ஜன., 7ல் பாக்யராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம் ; ரஜினி பங்கேற்கிறார் | கோல்கட்டாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகர் விருது | 30 வருடம் கழித்து கேரள துறைமுகத்திற்கு விசிட் அடித்த பம்பாய் படக்குழு | மறைந்த நடிகர் சீனிவாசனின் உண்மையான வயது என்ன? கிளம்பிய விவாதமும் தெளிந்த உண்மையும் | ஜெயிலர் 2வில் பெரிய ரோலில் நடிக்கிறேன் : சிவராஜ்குமார் | உம்மைப் பற்றி பேசாத நாளில்லை : கமல் | ஜனநாயகன் ஆடியோ விழாவில் அரசியல் பேசக்கூடாது : மலேசிய அரசு தடையாம் | ஜனவரி 23-ல் நெட் பிளிக்ஸில் தேரே இஸ்க் மே | ஜனவரி 9ல் ஜனநாயகன், ஜனவரி 10ல் பராசக்தி : என்னென்ன பிரச்னை ஏற்படும் தெரியுமா? |

2017ல் பிரபல மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில் இதில் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் திலீப் இந்த வழக்கில் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார். அதே சமயம் அவர் முதல் முறையாக குற்றம் சாட்டப்பட்டு சிறை சென்ற சமயத்தில் அவரை நடிகர் சங்கத்திலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இதனை தொடர்ந்து அவர் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன்பிறகு கடந்த வருடம் மோகன்லால் தலைவராக பொறுப்பேற்ற பிறகு நடிகர் திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்திற்குள் கொண்டுவர தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கும் எதிர்ப்பு எழுந்ததால் நடிகர் திலீப், நான் நடிகர் சங்கத்தில் இப்போது சேரப் போவதில்லை என்று கூறி அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த நிலையில் தற்போது நிரபராதி என நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டதால் அவர் நடிகர் சங்கத்தில் இணைவாரா அல்லது இணைத்துக் கொள்ளப்படுவாரா என்கிற கேள்வி கடந்த சில நாட்களாகவே பேசப்பட்டு வந்தது.
சமீபத்தில் தான் நடிகர் சங்கத்திற்கு புதிய தேர்தல் நடைபெற்று முதல் பெண் தலைவராக நடிகை ஸ்வேதா மேனன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒரு நடிகை சம்பந்தப்பட்ட பிரச்னையில் நடிகர் திலீப் சம்பந்தப்பட்டு தற்போது நீதிமன்றம் அவர் நிரபராதி என்று கூறிவிட்டாலும் கூட இன்னும் அவரை நடிகர் சங்கத்தில் சேர்ப்பது முடித்த முடிவை நாங்கள் எடுக்கவில்லை என்று நடிகை ஸ்வேதா மேனன் கூறியுள்ளார்.
“பாதிக்கப்பட்ட நடிகையின் இந்த வழக்கு குறித்து உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு மேல்முறையீடு செய்ய இருக்கிறது என தெரிய வந்துள்ளது. தனிப்பட்ட முறையில் நான் சொல்வது அதற்கு சரியான நேரம் இது தான். அதேபோல நடிகர் திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்ப்பது குறித்து இன்னும் எந்த விவாதங்களும் நடக்கவில்லை” என்று கூறியுள்ளார்.