துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
மலையாள சினிமாவின் மிக முக்கியமான குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் தான் கணேஷ்குமார். மலையாள நடிகர் சங்கத்தில் துணை தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். அதுமட்டுமல்ல இவர் ஒரு எம்.எல்.ஏவும் கூட. நான்கு முறை தொடர்ந்து எம்.எல்.ஏவாக தேர்வான கணேஷ்குமார், தற்போது கொல்லம் மாவட்டத்தில் உள்ள பத்தனாபுரம் தொகுதி எம்.எல்ஏவாக இருக்கிறார். படப்பிடிப்பு நேரம் போக மீதி நேரத்தில் தொகுதியை பார்வையிட கிளம்பிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் கணேஷ்குமார்.
அந்தவகையில் தனது தொகுதியில் உள்ள தளவூர் என்கிற பகுதியில் தனது எம்எல்ஏ நிதியில் இருந்து சுமார் மூன்று கோடி ரூபாய் ஒதுக்கி அரசு மருத்துவமனை ஒன்றை புதுப்பித்து கொடுத்தார் கணேஷ்குமார். அந்த மருத்துவமனையின் சுகாதாரம் குறித்து அதிக அளவில் புகார்கள் வந்ததை தொடர்ந்து யாரும் எதிர்பாராத விதமாக சமீபத்தில் அந்த மருத்துவமனைக்கு அதிரடி விசிட் அடித்தார் கணேஷ்குமார்.
புகார்களில் சொல்லப்பட்டது போலவே மருத்துவமனை சுத்தமாக பராமரிக்க படாமலும் குப்பைகள் நிறைந்தும் காணப்பட்டதை கண்கூடாகவே கண்ட கணேஷ்குமார். அங்கிருந்த ஒரு துடைப்பத்தை எடுத்து மருத்துவமனையை கூட்டிப்பெருக்கி சுத்தம் செய்ய ஆரம்பித்து விட்டார். அவரது இந்த செயலால் அங்கிருந்த டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்தனர்..
அதன்பின் அங்கிருந்த பணியாளர்களிடம் பேசிய கணேஷ்குமார் மக்கள் தங்கள் நோய் தீர்ப்பதற்காக வந்துபோகும் இடத்தை கொஞ்சம் மனிதாபிமானத்தோடும் வாங்குகின்ற சம்பளத்துக்கு கொஞ்சம் நன்றியுணர்வோடும் கவனித்து சுத்தப்படுத்த வேண்டும் என்றும் மீண்டும் இதுபோல தொடர்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கண்டிப்புடன் அறிவுறுத்தி சென்றார்.