கூலி படத்தில் அதிர்ச்சியூட்டும் இடைவேளை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல் | அஜித் 64 படத்தில் இணையும் இரண்டு நாயகிகள் | செல்வாக்கு மிக்கவர்களுக்கு கூட வளைந்து கொடுக்க மறுக்கும் சென்சார் போர்டு? | அகண்டா 2 : டப்பிங் பணிகளை நிறைவு செய்த பாலகிருஷ்ணா | வார் 2 படத்தில் சர்ப்ரைஸ் பாடல் | இயக்குனர் ஆகிறார் ரோபோ சங்கர் | அப்பா பற்றி ரஜினி சொன்னதை வெளியில் சொல்ல மாட்டேன் : கமல் மகள் ஸ்ருதி | பேய் கதையில் இரண்டு நாயகிகள் | அஜித்துடன் இணைந்த நரேன் கார்த்திகேயன் | பிளாஷ்பேக் : பெரும் வரவேற்பை பெற்ற முக்கோண காதல் கதை |
கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன், ஜோஜு ஜார்ஜ், விநாயகன் இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜும் நடித்திருந்த 'பட' என்கிற படம் வெளியானது. கே.எம்.கமல் என்பவர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கேரளாவில் ஆதிவாசிகள் மற்றும் தலித் நடத்திய போராட்ட களத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. விமர்சன ரீதியாக பாராட்டுக்களையும் இந்த படம் பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டியுள்ளார்
இதுபற்றி அவர் கூறும்போது, 'இந்த படம் தற்போது வெளியாகி உள்ளது. இதை தியேட்டரில் தான் பார்க்கவேண்டும். உண்மை சம்பவங்களின் பின்னணியில் பவர்ஃபுல்லான அதேசமயம் பொழுதுபோக்கு அம்சத்துடன் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இதை மலையாள சினிமாவின் திருப்பங்கள் கொண்ட ,'டாக் டே ஆப்டர்நூன்' படம் என்று சொன்னால் சரியாக இருக்கும் என்று பாராட்டியுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள இந்த டாக் டே ஆப்டர்நூன் படம் ஹாலிவுட் இயக்குனர் சிட்னி லூமெட் என்பவர் இயக்கி ரசிகர்களின் ஃபேவரிட் லிஸ்டில் இடம் பிடித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.