சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் 'பஹேலி கீத் 2' பாடல்: முகேஷ் கன்னா வெளியிட்டார் | ஒவ்வொரு கேரக்டருக்கும் இரண்டு போஸ்டர் ; நானி பட இயக்குனரின் புதிய ஐடியா | 20 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கூலி' டிரைலர் | திரிஷ்யம்-2 தயாரிப்பாளர் மீது பண மோசடி வழக்கு ; தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இயக்குனர் மீது பொய் வழக்கு ; நடிகையை தொடர்ந்து அவரது வழக்கறிஞரும் கைது | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் | காந்தாரா 2வில் ‛கனகாவதி' ஆக ருக்மணி வசந்த் | கூலி படத்தில் அதிர்ச்சியூட்டும் இடைவேளை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல் | அஜித் 64 படத்தில் இணையும் இரண்டு நாயகிகள் | செல்வாக்கு மிக்கவர்களுக்கு கூட வளைந்து கொடுக்க மறுக்கும் சென்சார் போர்டு? |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த படம் தமிழ் திரையுலகிலேயே முதன்முதலாக ஆயிரம் கோடி வசூல் செய்த (செய்யப்போகிற) படம் என்கிற பெருமையை பெறும் என எல்லோரும் சொல்லிவந்த நிலையில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. ரஜினிகாந்த் படங்களை குடும்பத்துடன் வந்து பார்க்கும் ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியான செய்தி தான். குழந்தைகளை அழைத்துக்கொண்டு படம் பார்க்க வர முடியாத சூழல் என்பதால் அதனாலயே நிறைய பெரியவர்களுக்கு இந்த படத்தை தியேட்டரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காமல் போகும். இதனால் வசூல் ரீதியாகவும் பாதிப்பு உண்டு.
ஆனால் நடிகர் ரஜினிகாந்துக்கும் அதே சமயம் இன்னொரு பக்கம் படத்தை தயாரித்த நிறுவனத்திற்கும் அரசியல் ரீதியாகவும் செல்வாக்கு அதிகம் இருக்கிறது. அவர்கள் நினைத்திருந்தால் இந்த படத்திற்கு தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி யு/ஏ சான்றிதழ் வாங்கி இருக்கலாமே என்றும் பலர் கேள்வி எழுப்பினர். சென்சார் போர்டை அதிகார செல்வாக்கு உள்ளவர்கள் தங்கள் பக்கம் வளைத்துக் கொள்கிறார்கள் என்கிற நீண்ட நாள் குற்றச்சாட்டும் பலர் இப்படி நினைப்பதற்கு காரணம். ஆனால் சென்சார் போர்டு அதிகார செல்வாக்கு கொண்டவர்களுக்கு வளைந்து கொடுக்க மறுக்கிறது என்பது சமீபத்திய இரண்டு படங்களின் மூலம் நிரூபணம் ஆகி உள்ளது.
கடந்த மாதம் மலையாளத்தில் நடிகர் சுரேஷ்கோபி நடிப்பில் ஜேஎஸ்கே (ஜானகி vs ஸ்டேட் ஆப் கேரளா) என்கிற திரைப்படம் வெளியானது.. இந்த படத்தின் டைட்டிலில் ஜானகி என்கிற பெயரை பயன்படுத்தக்கூடாது. அதை மாற்ற வேண்டும் என கெடுபிடி காட்டிய சென்சார் போர்டு, சான்றிதழ் வழங்க மறுத்தது. அதன்பிறகு படக்குழுவினர் நீதிமன்றம் வரை சென்றனர். கடைசியில் டைட்டிலில் உள்ள ஜானகி என்கிற பெயருடன் வி என்கிற இன்ஷியலை சேர்த்ததும் தான் சென்சார் போர்டு சான்றிதழ் வழங்கியது.
இத்தனைக்கும் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்தவர் சீனியர் நடிகரும் இப்போது மத்தியில் ஆளுங்கட்சியில் அமைச்சராக பொறுப்பு வகிப்பவருமான சுரேஷ்கோபி தான். அப்படிப்பட்டவர் நினைத்திருந்தால் தன் செல்வாக்கை பயன்படுத்தி இருக்கலாம். அவர் பயன்படுத்தினாரா இல்லை அதற்கு சென்சார் போர்டு வளைந்து கொடுக்கவில்லையா என்பது இன்னொரு கேள்வி. அதே சமயம் இந்த ஜே எஸ் கே பட விவாகரத்தில் சுரேஷ்கோபி அங்கம் வகிக்கும் கட்சிக்கு எதிரான கேரளா மாநில ஆளும் கட்சி கூட சென்சார் போர்டுக்கு எதிராகவே குரல் கொடுத்தது. அதையும் சென்சார் போட்டு கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் தான் இப்படி ரஜினிகாந்தின் படம் கிட்டத்தட்ட 38 வருடத்திற்கு பிறகு ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. இங்கேயும் தங்கள் படத்தை குழந்தைகளுடன் குடும்பமாக அனைவரும் பார்க்க வேண்டும் என்பதற்காக யு/ஏ சான்றிதழ் பெறும் விதமாக ரஜினிகாந்த் மற்றும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தங்கள் செல்வாக்கை பயன்படுத்தவில்லையா அல்லது அவர்களது செல்வாக்கை சென்சார் போர்டு பொருட்படுத்தவில்லையா? இதுவும் முக்கியமான கேள்வி. ஆனாலும் சென்சார் போர்டு, அதிகார செல்வாக்கிற்கு வளைந்து கொடுக்கவில்லை என்பதே இந்த இரண்டு படங்களின் ரிலீஸ் விஷயத்தில் நன்றாக தெரிகிறது.