வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

தெலுங்கு சினிமாவின் பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனம் சித்தாரா என்டர்டெயின்மெண்ட். பல வெற்றி படங்களை தயாரித்துள்ளது. இந்நிறுவனத்தை நிர்வகித்து வரும் தயாரிப்பாளர் நாக வம்சி, ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன், ஜுனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான வார் 2 படத்தை தெலுங்கில் வெளியிட்டார். ஆனால் இந்தப்படம் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை.
இதுபற்றி நாக வம்சி தற்போது அளித்த பேட்டியில் கூறியதாவது, "இந்தாண்டில் 'வார் 2' படத்தை ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ரூ. 68 கோடிக்கு வாங்கி விநியோகம் செய்தோம். ஆனால், எங்களுக்கு ரூ. 40 முதல் 45 கோடி தான் கைக்கு வந்தது. யஷ் ராஜ் பிலிம்ஸ் மீதமுள்ள ரூ. 18 கோடி பணத்தை திரும்பி தந்தனர்" என கூறினார்.