இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
மலையாள திரையுலகில் பிரபல குணச்சித்திர நடிகராக அறியப்பட்டவர் மறைந்த நடிகர் திலகன். தமிழில் விஜயகாந்த் நடித்த சத்ரியன் படம் மூலமாக வில்லனாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர். அவரது மகன் ஷம்மி திலகன் மலையாளத்தில் கடந்த இருபது வருடங்களாக வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழில் விஜய் மோகன்லால் இணைந்து நடித்த ஜில்லா படத்தில் கூட வில்லனாக நடித்திருந்தார்.
சமீபத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ஜனகணமன படத்தில் வழக்கறிஞராக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இந்தநிலையில் மலையாள சினிமா நடிகர் சங்கமான 'அம்மா'வில் இருந்து தற்போது அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் ஷம்மி திலகன். நேற்று கூடிய நடிகர் சங்க பொதுக்குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷம்மி திலகன் பெரும்பாலும் நடிகர் சங்கத்தின் விதிமுறைகளுக்கு மாறாக நடந்து கொண்டு வந்ததால் பலமுறை சங்கத்தால் எச்சரிக்கப்பட்டிருந்தார். சில மாதங்களுக்கு முன்பு நடந்த பொதுக்குழு கூட்ட வீடியோவை தனது மொபைலில் படம் பிடித்து அதை சோசியல் மீடியாவில் வெளியிட்டார் ஷம்மி திலகன். இதுகுறித்து அவரை கண்டித்து நடிகர் சங்கம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது ஆனாலும் அவர் இது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை என்பதால் நேற்று கூடிய பொதுக்குழுவில் அவரை சங்கத்திலிருந்து நீக்குவதாக முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு ஒரு சில நடிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் பெரும்பாலானோர் ஒப்புக்கொண்டதால் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.