படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் வெளியான சீதாராமம் படம் மிகப்பெரிய வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக பிரபல இயக்குனர் ஜோஷீயின் மகன் அபிலாஷ் ஜோஷி இயக்குனராக அறிமுகமாகும் புதிய படத்தில் நடிக்கிறார் துல்கர் சல்மான். இதுதவிர இன்னும் அறிவிக்கப்படாத ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார்.
பிரபல மலையாள காமெடி நடிகரும், துல்கர் சல்மானுடன் பல படங்களில் நண்பராக நடித்தவருமான சௌபின் சாஹிர் டைரக்சனில் ஒதிரம் கடகம் என்கிற படத்தில் நடிக்க இருப்பதாக கடந்த வருடம் துல்கர் சல்மானே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த நிலையில் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் ஒதிரம் கடகம் படத்தை தற்சமயம் நிறுத்தி வைத்திருப்பதாக கூறியுள்ளார் துல்கர் சல்மான். தான் சமீபத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு சில படங்களின் கதையும் இந்த படத்தின் கதையும் கிட்டத்தட்ட ஒரே சாயலில் இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் சிறிது காலம் கழித்து இந்த படத்தை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார் துல்கர் சல்மான்.
நடிகர் சௌபின் சாஹிர் சில வருடங்களுக்கு முன்பு துல்கர் சல்மானை வைத்து 'பறவ' என்கிற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.