துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
நடிகர் துல்கர் சல்மான் மலையாள திரையுலகில் அறிமுகம் ஆனாலும் கூட அங்கேயே தனது எல்லையை சுருக்கிக் கொள்ளாமல் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் தனது கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார். அதுமட்டுமல்ல கடந்த 2018ல் கார்வான் என்கிற படம் மூலம் பாலிவுட்டிலும் நுழைந்தார். சமீபத்தில் தெலுங்கில் நேரடியாக அவர் நடித்த சீதாராமம் என்கிற படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் ஹிந்தியில் கார்வான், சோயா பேக்டர் ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவதாக அவர் நடித்திருக்கும் சுப்.
அமிதாப் நடித்த சீனி கம், பா, ஷமிதாப் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் பால்கி இந்த படத்தை இயக்கியுள்ளார் தி ரிவெஞ்ச் ஆப் ஆர்டிஸ்ட் என்கிற டேக்லைனுடன் உருவாகியுள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சன்னி தியோலும் இன்னொரு கதாநாயகனாக நடித்துள்ளார். வரும் செப்.,23ம் தேதி இந்தபடம் வெளியாக உள்ளது. இந்தநிலையில் இந்தப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. ஹிந்தியில் துல்கர் நடித்த முதல் இரண்டு படங்களும் மிகப்பெரிய வரவேற்பை பெறாத நிலையில் தற்போது வெளியாகியுள்ள டீசர் ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்று வருவதுடன் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.