5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
மோகன்லால் நடித்த ‛மான்ஸ்டர்' படம் கடந்த 21ம் தேதி தியேட்டர்களில் வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாபூர் தயாரித்துள்ள இந்த படத்தில் ஹனிரோஸ், லட்சுமி மஞ்சு சித்திக் உள்பட பலர் நடத்துள்ளனர். மோகன்லால் தற்போது அலோன், ஒலிவும் தீரவும், பரோஸ், ராம், எம்புரான், லூசிபர் 2 உள்பட பல படங்களில் நடிக்கிறார். 2024 டிசம்பர் வரை அவரது கால்ஷீட் டயரி நிரம்பி வழிகிறது.
இந்த நிலையில் மோகன்லால் அடுத்ததாக 'ஜல்லிக்கட்டு' படத்தின் இயக்குநர் லிஜோ ஜோஸ் உடன் கைகோர்க்க உள்ளார். இது தொடர்பாக மோகன்லால் அதிகாரபூர்மாக அறிவித்துள்ளார். “எனது அடுத்த படம் இந்திய சினிமாவின் மிகவும் அற்புதமான மற்றும் அபார திறமையான இயக்குநர்களில் ஒருவரான லிஜோ ஜோஸுடன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தை ஜான் அண்ட் மேரி கிரியேட்டிவ், மேக்ஸ் லேப்ஸ் மற்றும் செஞ்சுரி பிலிம்ஸ் தயாரிக்கும்'' என தெரிவித்துள்ளார்.
இயக்குனர் லிஜோ ஜோஸ் தற்போது மம்முட்டி நடிக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் என்ற தமிழ் படத்தை இயக்கி வருகிறார்.