2026ல் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் நிவின் பாலி, மமிதா பைஜூ படம் | மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' |

மம்முட்டி நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படம் விமர்சனம் ரீதியாக பாராட்டப்பட்டது. இந்த நிலையில் அவர் நடித்துள்ள அதிரடி ஆக்சன் படமான கிறிஸ்டோபர் என்கிற படம் தற்போது வெளியாகி உள்ளது. இதில் கதாநாயகிகளாக சினேகா, ஐஸ்வர்ய லட்சுமி, அமலா பால் நடித்துள்ளனர். பிரபல இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் மம்முட்டியும் நாயகிகளில் ஒருவரான ஐஸ்வர்ய லட்சுமியும் இணைந்து பங்கேற்றனர். அப்போது ஐஸ்வர்ய லட்சுமியிடம் மம்முட்டி பற்றி கேட்கப்பட்டபோது, அவர் சர்க்கரை போன்றவர் என்று புகழ்ந்து கூறினார் ஐஸ்வர்யா லட்சுமி. உடனே மம்முட்டி அவரை கிண்டலடிக்கும் விதமாக சர்க்கரை என்று சொல்ல வேண்டாம் பஞ்சசாரம் (சீனி) என்று வேண்டுமானால் சொல்லுங்கள் என்றார்.
மேலும் சர்க்கரை என்றால் கருத்த நிறத்தில் உள்ள கருப்பட்டியை தான் குறிக்கிறது. இதே நான் உங்களைப் பற்றி சொல்லும்போது சர்க்கரை என்று சொன்னால் நன்றாக இருக்குமா என்று கேட்க, இதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் தர்ம சங்கடத்தில் ஆழ்ந்தார் ஐஸ்வர்ய லட்சுமி.
தற்போது இதுகுறித்த வீடியோ கிளிப் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் பலரும் இன்னமும் கூட்ட மம்முட்டி நிற பேதம் பார்க்கிறாரா என்று கூறி அவரது பேச்சுக்களுக்கு தங்களது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.