2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் |

நடிகர் மகேஷ்பாபு தற்போது தெலுங்கில் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அவரது 28வது படமாக உருவாகி வரும் இந்த படத்தில் கதாநாயகிகளாக பூஜா ஹெக்டே மற்றும் சம்யுக்தா இருவரும் நடித்து வருகின்றனர். தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர் ஜெயராம் இணைந்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் மகேஷ்பாபு மற்றும் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார் ஜெயராம்.
இந்த படத்தில் நடிப்பது குறித்து ஜெயராம் கூறும்போது, “மகேஷ்பாபுவின் தந்தை நடிகர் கிருஷ்ணாவின் படங்களை பார்த்து வளர்ந்தவன் நான். இப்போது மகேஷ்பாபு உடனேயே இணைந்து பணியாற்றி வருவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமல்ல, என்னுடைய நெருங்கிய நண்பரான திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸுடன் மீண்டும் இணைந்து பணிபுரிவதிலும் மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார் ஜெயராம்.
தமிழ், மலையாளம் என்கிற அளவிலேயே கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பயணித்து வந்த நடிகர் ஜெயராம், 2018ல் அனுஷ்கா நடிப்பில் வெளியான பாகமதி படத்தின் மூலம் தெலுங்கு திரையரங்கில் நுழைந்தார். அதைத்தொடர்ந்து அங்கே இளம் முன்னணி நடிகர்களாக வலம் வரும் அல்லு அர்ஜுன், பிரபாஸ் ஆகியோரிடம் இணைந்து நடித்த ஜெயராம் தற்போது ராம்சரண், ரவிதேஜா ஆகியோரின் படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.