ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

மலையாளத்தில் நடிகர் நிவின்பாலி தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வந்தவர், யார் கண் பட்டதோ தெரியவில்லை கடந்த சில வருடங்களாகவே ஒரு ஹிட் படம் கொடுப்பதற்காக ரொம்பவே தடுமாறி வருகிறார். இந்த நிலையில் ராம் இயக்கத்தில் தமிழில் இவர் நடித்துள்ள ஏழு கடல் ஏழுமலை என்கிற படம் குறித்த எதிர்பார்ப்பு தமிழ், மலையாளம் என இருதரப்பு ரசிகர்களிடமும் அதிகமாகவே இருக்கிறது. இதனை தொடர்ந்து அடுத்ததாக ராமச்சந்திரா பாஸ் அன் கோ என்கிற படத்தில் நடித்து வருகிறார் நிவின்பாலி. இது அவரது 42 வது படமாக உருவாகி வருகிறது.
இந்த படத்தின் டைட்டில் வித்தியாசமாக இருந்தாலும் கூட இதற்கு அடுத்ததாக நிவின்பாலியின் 44வது படத்தை இயக்க உள்ள இயக்குனரின் பெயர் தான் ரசிகர்களை அதைவிட ஆச்சரியப்படுத்தி உள்ளது. இன்னும் டைட்டில் வைக்கப்படாத அந்த படத்தை இயக்குபவர் அறிமுக இயக்குனரான 'ஆர்யன் ரமணி கிரிஜா வல்லபன்' என்பவர்தான். கிட்டத்தட்ட கமல் நடிப்பில் வெளியான மைக்கேல் மதன காமராஜன் பட பாணியில் இருக்கிறது இவரது பெயர். இதற்கு முன்னதாக 'பர்ன் தி பேபி' என்கிற குறும்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.