'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

கேரள முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இவரது மரணம் குறித்து மலையாள வில்லன் நடிகர் விநாயகன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் 'யார் இந்த உம்மன் சாண்டி?, அவர் செத்தால் அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?, என்னுடைய அப்பாவும் செத்துவிட்டார். உங்களுடைய அப்பாவும் செத்துவிட்டார். உம்மன் சாண்டி செத்ததற்காக எதற்கு 3 நாள் விடுமுறை விடுகின்றனர்? அவர் நல்லவர் என்று நீங்கள் வேண்டுமென்றால் சொல்லலாம். ஆனால் நான் சொல்ல மாட்டேன்” என்று அந்த வீடியோவி பேசி உள்ளார்.
இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவினர் பல இடங்களில் போராட்டம் நடத்தி விநாயகனை கைது செய்ய வேண்டும். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள்.
விநாயகன் சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறை அல்லை. வாய்ப்பு கேட்டு சென்ற ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக ஒரு வழக்கும் இவர் மீது உள்ளது.
நடிகர் விநாயகன் தமிழில் ‛திமிரு, சிலம்பாட்டம்' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.