இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
நடிகர் ஜெயராம் கடந்த சில வருடங்களாகவே மலையாளத்தில் நடிப்பதை குறைத்துக்கொண்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களிலும் ஜெயராமின் நடிப்பிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தெலுங்கிலும் இளம் முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இதுதவிர தற்போது கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் கோஸ்ட் படத்தில் நடிப்பதன் மூலம் கன்னடத்திலும் நுழைந்துள்ளார்.
இந்த நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலையாளத்தில் ஆப்ரஹாம் ஒஸ்லர் என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் ஜெயராம். இந்த படத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் சீரியல் கொலைகளை கண்டுபிடிக்கும் ஒரு போலீஸ் அதிகாரியாக ஜெயராம் நடிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் மம்முட்டியும் ஒரு முக்கியான கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது. தற்போது இதன் படப்பிடிப்பில் மம்முட்டியும் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
இது குறித்த புகைப்படமும் தற்போது படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற அஞ்சாம் பாதிரா படத்தை இயக்கிய மிதுன் மானுவேல் தாமஸ் தான் இந்த படத்தை இயக்கி வருகிறார். மம்முட்டி கெஸ்ட் ரோலில் நடித்தாலும் இந்த கொலை வழக்கில் முக்கியமான திருப்பம் ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.