கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் |

மலையாளத்தில் சமீபத்தில் ஆர்டிஎக்ஸ் என்கிற திரைப்படம் வெளியானது. இதில் நீரஜ் மாதவ், ஷேன் நிகம், ஆண்டனி வர்கீஸ் என மூன்று இளம் ஹீரோக்கள் இணைந்து நடித்திருந்தனர். மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையை மையப்படுத்தி ஆக்ஷன் படமாக வெளிவந்த இந்த படத்தை நகாஷ் ஹிதாயத் என்பவர் இயக்கி இருந்தார். மின்னல் முரளி உள்ளிட்ட வெற்றி படங்களை தயாரித்த சோபியா பால் தயாரித்துள்ளார். இந்த படம் வெளியான நாள் முதலே வரவேற்பு பெற்று தற்போது 50 கோடியையும் தாண்டி வசூலித்து வருகிறது.
கடந்த சில நாட்களாகவே ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அதன் ஹீரோ, இயக்குனர், இசையமைப்பாளர் ஆகியோருக்கு விலை உயர்ந்த காரும் பங்குத்தொகையும் பரிசாக தயாரிப்பு நிறுவனம் வழங்கி வருகிறது. இதையடுத்து தங்களுக்கும் அதுபோல ஏதாவது கிடைக்குமா என தனது எதிர்பார்ப்பை சோசியல் மீடியா பதிவு மூலமாக தமாஷாக வெளிப்படுத்தி உள்ளார் நாயகர்களில் ஒருவராக நடித்துள்ள ஆண்டனி வர்கீஸ்.
சமீபத்தில் தான் படத்தின் ஹீரோக்கள் மூவரும் தயாரிப்பாளர் சோபியா பாலை நேரில் சந்தித்து வந்தனர். இந்த பதிவில் அதுகுறித்து குறிப்பிட்டுள்ள ஆண்டனி வர்கீஸ், “ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு அதன் ஹீரோ ரஜினி, இயக்குனர் நெல்சன், ஆகியோருக்கு கார் பரிசாக வழங்கி இருக்கிறார்கள், இந்த டாபிக்கை பற்றி பேசலாம் என நினைக்கும்போதெல்லாம் , சோபியா பால் மேடம் விதவிதமான உணவுகளை சாப்பிட சொல்லி எங்களை பேச விடாமல் செய்து விட்டார்கள்,
மீண்டும் பேச முயற்சிக்கும்போது சம்பந்தமே இல்லாமல் வேறு டாபிக்கை பேசி இது பற்றி பேச வாய்ப்பு தராமல் செய்து விட்டார்கள். அனேகமாக வீட்டின் கதவுகளை பெரிதாக மாற்றி வைக்க வேண்டியது தான்.. ஏதோ பெரிதாக வரப்போகிறது என்று நினைக்கிறேன்.. படத்தின் இயக்குனர் நகாஷ் ஹிதாயத் கூட போர்சே கார் ஓட்டும் முறைகளை கற்று வருகிறார் என்றும் கேள்விப்பட்டேன்: எனக் கூறியுள்ளார்.
இதற்கு சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பலரும் உங்களுக்கும் நிச்சயமாக கார் இல்லை என்றாலும் கூட பைக்காவது கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.