23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
ஹாரர் த்ரில்லர் படங்களை மட்டுமே தயாரிக்கும் வகையில் உருவான நைட் ஷிப்ட் ஸ்டூடியா தயாரிக்கும் படம் 'பிரமயுகம்'. குறுகியகால தயாரிப்பான இந்த படத்தில் மம்முட்டி நாயகனாக நடித்துள்ளார். அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன் மற்றும் அமல்டா லிஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷேனாத் ஜலால் ஒளிப்பதிவாளராகவும், கிறிஸ்டோ சேவியர் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர். படத்திற்கு டி.டி.ராமகிருஷ்ணன் வசனம் எழுதியுள்ளார். ராகுல் சதாசிவன் இயக்கி உள்ளார்.
இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி ஒட்டபாலத்தில் தொடங்கியது. அதன் பிறகு கொச்சி, அயிரப்பள்ளியில் நடந்தது. நேற்று இதன் படப்பிடிப்புகள் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: 2024ம் ஆண்டின் தொடக்கத்தில் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடுவதை நோக்கமாகக் கொண்ட படக்குழு படப்பிடிப்பை முடித்து விட்டு இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக உள்ளது. நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மிக விரைவில் படத்தின் மார்க்கெட்டிங் பணிகளைத் தீவிரமாக தொடங்கவுள்ளது. 'பிரமயுகம்' மிகவும் எதிர்பார்க்கப்படும் பன்மொழி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. மம்முட்டியின் சமீபத்திய வெளியீடான 'கண்ணூர் ஸ்காவ்ட்' படம் வெற்றி பெற்றதும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க முக்கியக் காரணம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.