சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் |

மலையாள திரையுலகில் நல்ல படங்கள் வெளியாகும்போது மோகன்லால், மம்முட்டி போன்றவர்கள் தாங்களாகவே மனமுவந்து அவற்றுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பது உண்டு. அப்படிப்பட்ட படங்களின் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என படத்தைச் சேர்ந்த முக்கிய நபர்கள் மட்டும் சில நேரம் இது போன்ற பிரபலங்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெறுவது உண்டு. நடிகர் மம்முட்டி இதற்கெல்லாம் ஒருபடி மேலாக சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள ஆட்டம் என்கிற படத்தில் பணியாற்றிய மொத்த படக்குழுவினர் மற்றும் கலைஞர்களை தனது வீட்டிற்கே வரவழைத்து விருந்து உபசரித்து பாராட்டி உள்ளார்.
இந்த வருடத்தில் மலையாளத்தில் முதல் படமாக ஜனவரி 5ம் தேதி ஆட்டம் என்கிற படம் வெளியானது. ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான அதேசமயம் முன்னணி நட்சத்திர வரிசையில் இல்லாத பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் ஆனந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார். பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியான இந்த திரைப்படம் வெளியான நாளிலிருந்தே ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தப்படத்தை பார்த்து வியந்துபோன மம்முட்டி படக்குழுவினர் அனைவரையும் தனது வீட்டிற்கு அழைத்து உபசரித்து தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.