திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
மலையாளத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மோகன்லால் நடிப்பில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புடன் வெளியான படம் மலைக்கோட்டை வாலிபன். வித்தியாசமான கதைக்களங்களில் படங்களை இயக்கி வரும் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இந்த படத்தை இயக்கி உள்ளார். இவர்கள் கூட்டணியில் இந்த படம் உருவானதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ஏற்படுத்தியது. ஆனால் படம் வெளியான பிறகு ரசிகர்கள் பலரும் இந்த படம் தங்களை ஏமாற்றி விட்டதாக சோசியல் மீடியாவில் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
அதேசமயம் வித்தியாசமான சினிமாவை விரும்பும் பல ரசிகர்களும் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களும் இந்த படத்திற்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு பாலிவுட் இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் கூட எதிர்மறை விமர்சனங்களால் மலைக்கோட்டை வாலிபனை வீழ்த்த முடியாது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது நடிகை மஞ்சு வாரியர் மலைக்கோட்டை வாலிபன் படம் பார்த்துவிட்டு தனது வியப்பையே விமர்சனமாக பதிவிட்டுள்ளார்.
இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் அவர் கூறும்போது, “மலைக்கோட்டை வாலிபன் படத்தை பார்த்தபோது, நான் சிறு வயதில் எப்போதும் கேட்டு மகிழ்ந்த கதைகளின் உலகத்திற்கே என்னை அழைத்துச் சென்று விட்டது. மல்யுத்த வீரர்களும், அடிமை அதிகாரிகளும், ரத்த தாகம் கொண்ட அரசர்களும், கொடூரமான படை வீரர்களும் மற்றும் நல்ல மனிதர்களும் என ஒரு பேண்டஸி படத்திற்கு தேவையான அத்தனை அம்சங்களும் இந்த படத்தில் இருக்கின்றன.
படம் முடிந்து வெளிவந்த பின்னும் கூட இசையமைப்பாளர் பிரசாந்த் பிள்ளையின் பின்னணி இசை ஏற்படுத்திய தாக்கம் நீங்கவில்லை. லாலேட்டன் பற்றி சொல்லவே தேவையில்லை. மலைக்கோட்டை வாலிபனாகவே அவர் கூடு விட்டு கூடு பாய்ந்துள்ளார். இது முழுக்க முழுக்க ஒரு லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் படம் தான். மலையாள சினிமாவிற்கு அவர் இன்னும் சிலவற்றை செய்ய வேண்டி இருக்கிறது'' என்று கூறியுள்ளார்.