'கூலி' பட டிக்கெட் கட்டணம் ரூ.500: தியேட்டர்களுக்கு தரப்படும் அழுத்தம்! | மிஷ்கின் என்னை பாப்பா என்று அழைப்பார்! : ஸ்ருதிஹாசன் | ரஜினிக்கு வாழ்த்து சொன்ன சந்திரபாபு நாயுடு மகன் | ரஜினியின் முதல் படமும், 50வது ஆண்டு 'கூலி' படமும் வெளியாகும் ஒரே தியேட்டர் | நடிகர் சங்க பொதுச்செயலாளராக போட்டியிடுபவருக்கு எதிராக பரப்பப்படும் மெமரி கார்டு குற்றச்சாட்டு | சோதனை அதிகாரிகளின் வற்புறுத்தலுக்கு பின் மாஸ்க் கழட்டிய அல்லு அர்ஜுன் ; வைரலாகும் வீடியோ | ஹோட்டலில் 100 பேர் மத்தியில் அழ வைத்து ஆடிசன் செய்தார்கள் ; நடிகை இஷா தல்வார் | அரை சதத்தை தொட்ட மகேஷ் பாபு ; சிரஞ்சீவி, ஜூனியர் என்டிஆர் வாழ்த்து | கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு வந்த சின்ன குஷ்பூ நடிகை | நீரும் நெருப்பும், ராஜாவின் பார்வையிலே, வேலையில்லா பட்டதாரி-2 - ஞாயிறு திரைப்படங்கள் |
மலையாள திரையுலகை பொறுத்தவரை ஒரு வெற்றிப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு கூட மிகப்பெரிய அளவில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அப்படி ஏதேனும் கட்டாய தேவை இருந்தால் மட்டுமே இரண்டாம் பாகம் பற்றி யோசிப்பார்கள் (சிபிஐ பாகங்கள் போல). அதனால் மலையாளத்தில் இரண்டாம் பாக படங்கள் வெளியாவது ரொம்பவே குறைவு. இந்த நிலையில் தான் 'ஆடு' என்கிற படத்தின் மூன்றாம் பாகம் குறித்த அறிவிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் ஜெயசூர்யா நடிப்பில் கடந்த 2015ல் 'ஆடு' படத்தின் முதல் பாகம் வெளியானது. இந்த படத்தை மிதுன் மானுவேல் தாமஸ் என்பவர் இயக்கியிருந்தார். இவர் தான் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் சீரியல் கொலையை மையப்படுத்தி வெளியாகி சூப்பர் ஹிட் ஆன 'அஞ்சாம் பாதிரா' என்கிற படத்தை இயக்கியவர். அதைத் தொடர்ந்து 2017ல் ஆடு படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி ஹிட்டானது.
தற்போது ஏழு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இதே கூட்டணியில் இந்த படத்தின் மூன்றாம் பாகத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த மூன்று பாகங்களின் தயாரிப்பாளர், மலையாள நடிகர் விஜய் பாபு தான். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடிகை பலாத்கார வழக்கில் சிக்கி வெளிநாட்டுக்கு சென்று மூன்று மாதங்கள் தலைமறைவாக இருந்து பரபரப்பை ஏற்படுத்தியவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.