அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் |

மலையாள திரையுலகில் மோகன்லால், மம்முட்டிக்கு இணையாக நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் சுரேஷ்கோபி. கடந்த சில வருடங்களுக்கு முன்பு அரசியலில் நுழைந்த இவர் சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அரசியலில் நுழைந்ததால் சில வருடங்களுக்கு முன்பு இவரது திரையுலக பயணத்தில் சிறிய தேக்கம் விழுந்தது. அந்த சமயத்தில் இவரது மூத்த மகன் கோகுல் சுரேஷ் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அவரால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. கதாநாயகனாக இல்லாமல், ஹீரோயின் நண்பனாக, முக்கிய துணை கதாபாத்திரம் போன்றவற்றில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சுரேஷ் கோபியின் இரண்டாவது மகன் மாதவ் சுரேஷ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் அறிமுகமாகும் கும்மாட்டி களி படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் வின்சென்ட் செல்வா. தமிழில் பிரியமுடன், யூத் என இரண்டு ஹிட் படங்களை விஜய்க்கு கொடுத்த இவர் முதன்முறையாக இந்த படத்தின் மூலம் மலையாளத்தில் அடியெடுத்து வைக்கிறார். தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரி இந்த படத்தை தயாரித்துள்ளார்.
சுரேஷ் கோபியின் மகனை அறிமுகப்படுத்த மலையாளத்திலேயே பல இயக்குனர்கள் தயாராக இருக்கும் நிலையில் தமிழிலிருந்து ஒரு இயக்குனரை அழைத்து வருவதற்கு காரணம் என்ன என சுரேஷ்கோபியிடம் கேட்கப்பட்டபோது, “நல்ல கதை.. ஏற்கனவே விஜய்யை வைத்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர்.. நல்ல தயாரிப்பு நிறுவனம்.. இது போதாதா என் மகனின் அறிமுகத்திற்கு ?” என்று நம்பிக்கையாக வின்சென்ட் செல்வாவிடம் மகனை ஒப்படைத்து விட்டாராம். அதுமட்டுமல்ல ஒருநாள் கூட மகனின் நடிப்பை பார்க்க படப்பிடிப்பு தளத்திற்கும் வந்தது இல்லையாம். வரும் ஜூலை மாதம் இந்த படம் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் வின்சென்ட் செல்வாவை கூறியுள்ளார்.