விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" |

தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத். மகேஷ்பாபு, ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து ஹிட் படங்களை கொடுத்தவர். கடைசியாக இவர் விஜய் தேவரகொண்டாவை வைத்து இயக்கிய லைகர் படம் தோல்வியடைந்த நிலையில் தற்போது ராம் பொத்தினேனியை வைத்து டபுள் ஐ ஸ்மார்ட் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
பூரி ஜெகன்நாத்தின் மகன் ஆகாஷ் பூரி, ராம்சரண் கதாநாயகனாக அறிமுகமாகிய சிறுத்தா படத்தில் ஜூனியர் ராம் சரணாக நடித்தவர். அதன்பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் 2015ல் ஆந்திரா பொறி என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். 2018ல் தனது தந்தை இயக்கிய மெகபூபா என்கிற படத்திலும் கதாநாயகனாக நடித்தார். இந்த படம் ஓரளவு வெற்றி படமாக அமைந்தது.
ஆனாலும் அதன் பிறகு அவர் நடித்த ரொமான்டிக் மற்றும் சோர் பஜார் ஆகிய படங்கள் பெரிய வரவேற்பு பெறவில்லை. இந்த நிலையில் தான் சமீபத்தில் தனது 27ஆவது பிறந்தநாளை கொண்டாடிய ஆகாஷ் பூரி, இன்றிலிருந்து தனது பெயரை ஆகாஷ் ஜெகன்நாத் என மாற்றிக் கொண்டுள்ளதாக புதிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
சமீபகாலமாக திரையுலகில் தனக்கு சரியான முன்னேற்றம் இல்லை என்பதால் இந்தப்பெயர் மாற்றம் தன்னை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லும் என நம்பிக்கை கொண்டு தனது பெயரை தற்போது அவர் மாற்றி உள்ளதாக சொல்லப்படுகிறது.