பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கேஜிஎப் திரைப்படத்தின் இரண்டு பாகங்களின் தொடர் வெற்றி மூலம் தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது பாலிவுட் வரை வியக்க வைத்தவர் கன்னட நடிகர் யஷ். கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர் நடிக்கும் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நடிகையும் தேசிய விருதுபெற்ற மலையாள இயக்குனருமான கீது மோகன்தாஸ் இயக்க உள்ள டாக்ஸிக் என்கிற படத்தில் அடுத்ததாக நடிக்க இருக்கிறார் யஷ். இது குறித்து அறிவிப்பு கடந்து சில மாதங்களுக்கு முன்பே வெளியானாலும் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையில் நாளை (ஆகஸ்ட் 8) இந்த படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் துவங்க உள்ளது. காரணம் 8 என்பது யஷ்ஷின் ராசியான எண். அது மட்டுமல்ல நாளைய தேதி 8 8 2024 என்பது இரண்டு எட்டுகள் சேர்ந்து வருவதால் அந்த தேதியில் படப்பிடிப்பை சென்டிமென்டாக துவங்கினால் நன்றாக இருக்கும் என யஷ் விரும்பியதால் நாளை முதல் படப்பிடிப்பு துவங்குகிறது என்று சொல்லப்படுகிறது. இதை அடுத்து கடந்த சில நாட்களாக தர்மஸ்தலா கோவில், சூரிய ஸ்ரீ சதாசிவ ருத்ர கோவில் என தனது குடும்பத்துடன் கோவில்களுக்கு சென்று வழிபட்டு வருகிறார் யஷ்.