ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பிரபல ஹீரோக்களின் பல வருடத்திற்கு முந்தைய ஹிட் படங்கள் சம்பந்தப்பட்ட ஹீரோக்களின் பிறந்தநாளிலோ, அல்லது படம் வெளியான பத்தாம், 20ம் வருட கொண்டாட்டம் என ஏதோ ஒரு காரணத்தை மையமாக வைத்து டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு அல்லது சாதாரணமாகவோ ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. இப்படி ரீ ரிலீஸ் செய்யப்படும் போது, சில படங்கள் ஆரம்பத்தில் ரிலீசான போது சம்பாதித்த வசூலை விட அதிகமாக சம்பாதித்த நிகழ்வுகளும் உண்டு. அந்த வகையில் தற்போது புத்தாண்டு கொண்டாட்டமாக நடிகர் சிரஞ்சீவி நடித்த ஹிட்லர் திரைப்படம் வரும் ஜனவரி 1ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆக வெளியாக இருக்கிறது.
மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் தான் அதே பெயரில் 1997ல் தெலுங்கிலும் ஹிட்லர் என்கிற பெயரில் சிரஞ்சீவி நடிக்க ரீமேக் செய்யப்பட்டது. சிரஞ்சீவியின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான முத்யாலா சுப்பையா என்பவர் இந்த படத்தை இயக்கினார். ரம்பா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் சிரஞ்சீவியின் தங்கைகளாக 5 பேர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்
தனது 5 தங்கைகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்பதற்காக அன்பான சர்வாதிகாரியாக நடந்து கொள்ளும் ஒரு அண்ணனைப் பற்றிய படமாக இது உருவானது. அதற்கு முன்பு இரண்டு தோல்வி படங்களை கொடுத்திருந்த சிரஞ்சீவிக்கு இந்த படத்தின் வெற்றி அவரை மீண்டும் நிமிர்ந்து நிற்கச் செய்தது என்றால் மிகை இல்லை.