நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
மலையாளத் திரையுலகில் கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு மேலாக நடிகர்கள் மோகன்லாலும் மம்முட்டியும் முன்னணி நடிகர்களாக, இரு துருவ போட்டி நடிகர்களாக வலம் வருகின்றனர். அதே சமயம் அவர்களது படங்களுக்குள் தான் போட்டி என்றாலும் அவர்கள் மிக நெருங்கிய நட்பை இத்தனை வருடமாக கட்டிக் காத்து வருகின்றனர். பொது இடங்களிலும் தங்களது நட்பையும் அன்பையும் பரிமாறிக்கொள்வதில் ரசிகர்களிடம் வெளிக்காட்டுவதில் இருவரும் தவறியதே இல்லை. அந்த வகையில் சமீபத்தில் நடிகர் மோகன்லால் தனது 'எம்புரான்' திரைப்படம் விரைவில் வெளியாவதை முன்னிட்டு சபரிமலை தரிசனம் செய்ய சென்று இருந்தார்.
அப்போது மம்முட்டியின் பெயரில் அதாவது அவரது நிஜ பெயரான முகமது குட்டியின் பெயரில் அவர் அர்ச்சனை செய்ததாக தகவல் வெளியானது. இதுகுறித்து மோகன்லால் ரசிகர்கள் மட்டுமல்ல மம்முட்டி ரசிகர்களும் நெகிழ்ந்து போய் அவரது செயலை பாராட்டினார்கள். ஆனால் சமீபத்தில் மோகன்லாலிடம் எதற்காக இந்த பிரார்த்தனை என்று கேட்டபோது, பிரார்த்தனையை வெளியில் சொல்லக்கூடாது என கூறியுள்ளார்.
“மம்முட்டிக்கான எனது பிரார்த்தனை என்னுடைய பெர்சனல் விஷயம்.. நான் அதை ஏன் வெளியில் சொல்ல வேண்டும்? இப்படி நான் அவருக்காக பிரார்த்தனை செய்வதற்காக அர்ச்சனை சீட்டிற்கு பணம் கட்டிய விஷயம் கோவில் நிர்வாகத்தில் இருந்த யாரோ ஒருவர் மூலமாக மீடியாக்களில் வெளியாகிவிட்டது. இல்லை என்றால் இந்த விஷயம் என்னுடனேயே அமுங்கி இருக்கும். எல்லோரையும் போல மம்முட்டிக்கு ஒரு சிறிய பிரச்னை இருந்தது இப்போது அவர் நன்றாக இருக்கிறார். கவலைப்பட எதுவும் இல்லை” என்று வெளிப்படையாக பதில் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மம்முட்டிக்கு கேன்சர் பாதிப்பு என்கிற ஒரு செய்தி (வதந்தி) மீடியாக்களில் பரவியது. அது குணமாவதற்காக தான் மோகன்லால் சபரிமலையில் மம்முட்டியின் பெயரில் அர்ச்சனை செய்து வழிபட்டுள்ளார் என்றும் சொல்லப்பட்டது இங்கே குறிப்பிடத்தக்கது.