டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

2017ல் கேரளாவில் பிரபல மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு சித்ரவதைக்கு ஆளான சம்பவத்தில் நடிகர் திலீப்பும் ஒரு முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். சமீபத்தில் இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் திலீப் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் துவக்க காலத்தில் அவர் கைது செய்யப்பட்டு மூன்று மாதம் சிறைவாசம் அனுபவித்து பின்னர் ஜாமினில் வெளிவந்து படங்களில் நடித்து வந்தார்.
அந்த சமயத்தில் அவர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு அவரது பாஸ்போர்ட் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு தனது படங்கள் மற்றும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீதிமன்றத்தின் அனுமதி பெற்று வெளிநாடு சென்று வந்தார். திரும்பி வந்த பிறகு மீண்டும் தனது பாஸ்போர்ட்டை போலீஸாரிடம் ஒப்படைத்து இருந்தார்.. தற்போது அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையில் போலீஸார் திலீப்பின் பாஸ்போர்ட்டை அவரிடம் ஒப்படைத்தனர்.
இதற்கு அரசு வழக்கறிஞர் தரப்பில், இந்த வழக்கு மீண்டும் அப்பீலுக்கு செல்ல இருக்கிறது என்பதால் அவரது பாஸ்போர்ட்டை திரும்ப கொடுக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் நீதிமன்றமோ, தற்போதைய வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.. அதனால் அவர் பாஸ்போர்ட்டை அவரிடம் வழங்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறியதை தொடர்ந்து திலீப் வசம் அவரது பாஸ்போர்ட் ஒப்படைக்கப்பட்டுள்ளது.