ஏஆர் ரஹ்மான் பாடல்களுக்கு சிறு வயதில் நடனமாடியவன் : யஷ் | ஸ்ரீலீலாவின் ஹிந்தி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஜெயிலர் 2, ரணபாலி : அவதூறு கருத்துக்களுக்கு நீதிமன்றத் தடை | ஜெயிலர் 2 : வரவேற்பைப் பெறும் மூர்த்தி அண்ணன் | ரசிகர்களுக்கு ஓடிடியில் பல ஹிட் படங்களுடன் காத்திருக்கும் ஆயுதபூஜை கொண்டாட்டம்...! | மனைவிக்காக இன்றும் வீட்டில் தொடரும் நவராத்திரி கொண்டாட்டம் : இளையராஜா சொன்ன நெகிழ்ச்சி சம்பவம் | இசையமைப்பாளர் அனிருத் பிறந்தநாள் : இந்த பாடல்களை மறக்க முடியுமா? | வெற்றி, வாணி போஜனின் 'ரேவன்' | ஹீரோவான ‛பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஆகாஷ் பிரேம்குமார் : தனி ஹீரோயினாக ஸ்ரீதேவி அப்பல்லா | ஜெயிலர் 2 : முதல் நாள் வசூல் 120 கோடி பிளஸ் |

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் மமிதா பைஜூ மற்றும் நஸ்லேன் இருவர் நடிப்பில் வெளியான 'பிரேமலு' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தில் கதாநாயகனாக நடித்த நஸ்லேனும் ஓரளவுக்கு கவனம் ஈர்த்தார். அதற்கு முன்பே அவர் சின்ன சின்ன படங்களில் நடித்திருந்தாலும் இந்த படம் தான் அவருக்கு பெரிய அளவில் கை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து கல்யாணி பிரியதர்ஷனுடன் இணைந்து இவர் நடித்த 'லோகா: சாப்டர் 1 சந்திரா' மற்றும் இவர் தனியாக நடித்த 'ஆழப்புலா ஜிம்கானா' மற்றும் 'மல்லுவுட் டைம்ஸ்' ஆகிய படங்கள் இவரை ஓரளவுக்கு முன்னணி வரிசைக்கு உயர்த்தின.
இப்போது தமிழில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'சீன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் முதன் முறையாக தனது முதல் ஆடம்பர எஸ்யூவி காராக ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ஆட்டோ பயோகிராபி மாடலை வாங்கியுள்ளார். கொச்சியில் காரின் எக்ஸ் ஷோரூம் விலை 1.60 கோடியாக இருந்தாலும் பதிவு கட்டணம் மற்றும் வரிகள் எல்லாம் சேர்த்து ஆன் ரோடு விலையாக 2.03 கோடி வரை ஆகிறது. கொச்சியில் உள்ள ஷோரூமில் அவர் காருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.




