இந்தியன் பனோரமா திரைப்பட விழாவிற்கு தேர்வான ‛‛தாய்கிழவி, அறிவு'' | 34 ஆண்டுகளுக்குபின் திரைக்கு வருகிறது நீண்ட தலைப்புள்ள படம் | சினிமா சங்கங்கள் சார்பில் முதல்வர் விஜய்க்கு பாராட்டு விழா | சிரஞ்சீவியின் மெகாவெர்ஸில் இணையும் பிரபாஸ் | ரொமாண்டிக், காமெடி கதையில் உருவாகும் துல்கர் சல்மானின் அடுத்த தெலுங்கு படம் | தமிழ்நாட்டில் சீன் படத்தை முந்தி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய ராமாயணா | பண்டிட் குயின் இரண்டாம் பாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | சிரஞ்சீவி படப்பிடிப்பில் இருந்து திரும்பிய போது விபத்தில் சிக்கிய நடன இயக்குனர் | ஓம் படத்திற்காக தொடர்ந்து இரண்டரை நாட்கள் கதை கேட்ட மம்முட்டி | 30 வருடங்களுக்குப் பிறகு சுகாசினி படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு |

மம்முட்டி இந்த 75 வயதிலும் சுறுசுறுப்பாக இளம் கதாநாயகர்களைப் போலப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். பெரும்பாலும் அவரைப் பற்றிய எதிர்மறைச் செய்திகளோ அல்லது அவர் படம் வெளியாகும் போது எதிர்ப்புப் பிரச்சாரமோ பெரிய அளவில் செய்யப்படுவது இல்லை. அந்த அளவிற்கு எதிரிகளைக் குறைவாகவே பெற்றுள்ளதாக சொல்லப்படும் மம்முட்டி, எதிரிகளை ஒழிப்பதற்குத் தான் ஒரு சிறிய தந்திரத்தைப் பயன்படுத்துவதாகச் சமீபத்திய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டபோது பேசியுள்ளார்.
கொச்சியில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் மம்முட்டி கலந்து கொண்டு பேசியபோது, "எனது எதிரிகளை ஒழிப்பதற்கு நான் சிறிய தந்திரத்தைப் பயன்படுத்துகிறேன். அவர்களை எனது நண்பர்களாக மாற்றுகிறேன். இது குண்டு வீசுவதோ, அடிக்க ஆட்களை அனுப்புவதோ அல்லது சுடுவதோ கிடையாது. எனக்குத் தெரிந்த ஒவ்வொரு எதிரியையும் அவர்களை நண்பனாக்குவதன் மூலமே நான் அழிக்கிறேன். நம்மால் அறியப்பட்ட எதிரிகள் அனைவரையும் நண்பர்களாக மாற்ற முடியும். எதிரிகள் தங்கள் முதல் படியை எடுக்கவில்லை என்றாலும் கூட நாமே முன்வந்து அந்த முயற்சியை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.