தனுஷின் 'ஓம்' படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து தகவல் வெளியிட்ட ஸ்ரீலீலா! | மகள் ஐஸ்வர்யா பற்றி அவதூறு : கமிஷனரிடம் நடிகர் அர்ஜூன் புகார் | அன்பில் அவன் முதல் ஹைக்கூ வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | சினிமாவான ராஜேஷ்குமார் நாவல்: நாளை ரிலீஸ் | 'மக்கள் காவலன்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு | அமிதாப், அபிஷேக்கை கொல்ல 200 பேர் தயார்: தாதாக்கள் பகிரங்க மிரட்டல் | பொங்கல் ரேசில் இன்னொரு படமா...? : அருண் விஜயின் பிறந்தநாளில் இருளன் முதல்பார்வை வெளியீடு | தொகுப்பாளினிக்கு பாலியல் தொல்லை: அப்பா நடிகர் மீது போலீசில் புகார் | பிளாஷ்பேக்: ஸ்ரீதேவி விஜயகுமாரை அடையாளம் காட்டிய 'அம்மா வந்தாச்சு' | பிளாஷ்பேக்: 100வது படத்தில் நூற்றாண்டு சாதனை |

நெட்பிளிக்ஸ் தளத்திற்காக, மெகாவெர்ஸ் என்ற பிரபலங்கள் பங்கேற்கும் நேர்காணல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளார் நடிகர் சிரஞ்சீவி. இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பை அவர் ஏற்கனவே தொடங்கி நடத்தி வரும் நிலையில், அடுத்த மாதம் இது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். அந்த வகையில், நடிகர் பிரபாஸ் அடுத்த வாரம் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பிற்காகத் தனது தேதிகளை ஒதுக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடன் ஸ்பிரிட் படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். சந்தீப் ரெட்டி வங்கா சிரஞ்சீவியின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேப்போல், பிரபாஸும், சிரஞ்சீவியுடன் நெருங்கிய நட்பைக் கொண்டுள்ளார். அவரை தனது முன்மாதிரியாகவும் கருதுகிறார். மேலும், இதுபோன்ற நேர்காணல் நிகழ்ச்சிகள் பிரபாஸிற்கு புதிதல்ல. இதற்கு முன்பே அவர் கரண் ஜோஹர் மற்றும் நந்தமுரி பாலகிருஷ்ணா ஆகியோரது நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், கமல்ஹாசன், நாகார்ஜுனா, பிரம்மானந்தம், அகில், நாகசைதன்யா, வெங்கடேஷ், ராணா உள்ளிட்ட பலரும் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பவன் கல்யாண், ராம் சரண் மற்றும் நந்தமுரி பாலகிருஷ்ணா ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் சிறப்புத் தோற்றத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.




