Advertisement

சிறப்புச்செய்திகள்

அன்பில் அவன் முதல் ஹைக்கூ வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | சினிமாவான ராஜேஷ்குமார் நாவல்: நாளை ரிலீஸ் | 'மக்கள் காவலன்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு | அமிதாப், அபிஷேக்கை கொல்ல 200 பேர் தயார்: தாதாக்கள் பகிரங்க மிரட்டல் | பொங்கல் ரேசில் இன்னொரு படமா...? : அருண் விஜயின் பிறந்தநாளில் இருளன் முதல்பார்வை வெளியீடு | தொகுப்பாளினிக்கு பாலியல் தொல்லை: அப்பா நடிகர் மீது போலீசில் புகார் | பிளாஷ்பேக்: ஸ்ரீதேவி விஜயகுமாரை அடையாளம் காட்டிய 'அம்மா வந்தாச்சு' | பிளாஷ்பேக்: 100வது படத்தில் நூற்றாண்டு சாதனை | டோரதியால் பெருமை - கீர்த்தி சுரேஷ் : மேடையிலேயே மோதிரம் பரிசளித்த மிஷ்கின் | சூர்யா படத்தில் வில்லனா? கோபிசந்த் தரப்பு மறுப்பு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அன்பில் அவன் முதல் ஹைக்கூ வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்...!

19 நவ, 2026 - 01:16 IST
எழுத்தின் அளவு:
This-Weeks-OTT-Release...!
Advertisement

ஓடிடியில் இந்த வாரம் வெளியாகவுள்ள படங்களின் பட்டியல் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.

அன்பில் அவன்

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'அன்பில் அவன்'. திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்ற இந்த படம் நாளை(நவ., 20) சோனி லைவ்வில் வெளியாகவுள்ளது. முன்னதாக கடந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

418

தெலுங்கு இயக்குநர் கீர்த்தன் நாதகவுடா இயக்கத்தில், சைத்ரா ஜே. ஆச்சார், ரமேஷ் இந்திரா, சூர்ய ராஜ் வீரபத்தினி ஆகியோர் நடிப்பில் வெளியான திகில் படம் '418'. இந்த படம் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நெட்பிளிக்ஸில் நாளை(நவ., 20) வெளியாகவுள்ளது.

ஹைக்கூ

யுவராஜ் சின்ன சாமி இயக்கத்தில், நடிகர் ஏகன் மற்றும் ஸ்ரீதேவி அப்பல்லா நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஹைக்கூ'. இந்த படம் நாளை (நவ., 20) நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.

கிரேஸி கல்யாணம்

பத்ரப்பா கஜுலா இயக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் தருண் பாஸ்கரன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கிரேஸி கல்யாணம்'. இந்த படம் நாளை(நவ., 20) ஆஹாவில் வெளியாகவுள்ளது.

அனுமனா பக்சி(Anumana Pakshi)

தெலுங்கு இயக்குநர் விமல் கிருஷ்ணா இயக்கத்தில் ராக் மயூர், மெரின் பிலிப், பிரின்ஸ் செசில், அனன்யா அகுலா, சரித், பிரம்மாஜி, ராசி மற்றும் அஜய் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'அனுமனா பக்சி'. இந்த படம் நாளை (நவ., 20) சன் நெக்ஸ்டில் வெளியாகவுள்ளது.

தி ப்ளூ ரோடு

தி ப்ளூ ரோடு வெப் சீரிஸ் நாளை மறுநாள்(நவ., 21) நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த கிரைம் திரில்லர் தொடர் 8 தொடர்களைக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சினிமாவான ராஜேஷ்குமார் நாவல்: நாளை ரிலீஸ்சினிமாவான ராஜேஷ்குமார் நாவல்: நாளை ... சல்மான் கானின் 'மாத்ருபூமி' படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் சல்மான் கானின் 'மாத்ருபூமி' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap